நயன்தாராவுக்குள் இப்படி ஒரு மாற்றமா?.. அட எல்லாத்தையுமே சரி செய்ய ஆரம்பித்துவிட்டாராம்

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவர். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் இருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக டாக்சிக், ராக்காயி, மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஐயா படத்தில் தமிழ் சினிமாவில் கரியரை தொடங்கிய நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் பிரபலமானார். அதனையடுத்து வரிசையாக ஹிட் படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கென மார்க்கெட்டை பிடித்தார். கவர்ச்சி வேடங்களில் எல்லாம் சிக்சர் அடித்த அவர்; நடிகர் சிம்புவை காதலித்தார். ஆனால் அந்தக் காதல் பாதியில் முடிந்தது. அதனையடுத்து வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவாவை காதலித்து மதமெல்லாம் மாறினார். ஆனால் அந்தக் காதலும் பிரேக்கப் ஆனது.

விக்னேஷ் சிவனுடன் காதல்: இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்திருந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். அப்படி அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் நீண்ட வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் செய்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார் நயன்.

New Update on Nayanthara s Film Commitments After Mookuthi Amman 2
Photo Credit:

அதுவும் சர்ச்சைதான்: நயன்தாரா என்றாலே சர்ச்சை என்பதற்கேற்ப வாடகை தாய் மூலம் அவர் விதிகளுக்குட்பட்டுத்தான் குழந்தை பெற்றாரா என்ற சர்ச்சை எழுந்தது. அதனையடுத்து அரசு தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அத்தனையும் விதிகள்படிதான் நடந்திருக்கிறது என்று தெரியவந்தது. அதன் காரணமாக அந்தப் பிரச்னை ஒருவழியாக முடிந்தது. திருமணம் முடிந்து, குழந்தை பெற்ற அவர் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.

மூக்குத்தி அம்மன் 2: அந்தவகையில் சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் கமிட்டானார். அந்தப் படம் ஆரம்பித்தபோது படக்குழுவினருடன் அவருக்கு மோதல் ஏற்பட்டதாகவும்; அதன் காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார் என்றெல்லாம் தகவல்கள் பரவின. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. தற்போது அந்தப் படத்தில் தனக்கான ஷூட்டிங்கை முடித்துக்கொடுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

புதிய தகவல்: இந்நிலையில் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு முன்னதாகவே ராக்காயி, மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் கமிட்டானார். ஆனால் அந்தப் படங்களுக்கு முறையாக தேதிகள் வழங்காமல் இழுத்தடித்திக்கொண்டிருந்ததாகவும்; தற்போது அதற்கான தேதிகளையும் பிரித்துக்கொடுத்துவிட்டார் என்று தகவல் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X