புத்தாண்டு பார்ட்டியில் வெறும் 7 நிமிடம் ஆட ரூ.6 கோடி வாங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா

By Siva

சென்னை: டிசம்பர் 31ம் தேதி இரவு சென்னையில் நடக்கும் புத்தாண்டு பார்ட்யில் ஆட நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்படுகிறதாம்.

புத்தாண்டை வரவேற்க நள்ளிரவில் ஹோட்டல்களில் நடக்கும் பெரிய பார்ட்டிகளில் நடிகர், நடிகைகளை ஆட வைப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஆட மார்க்கெட் இல்லாத நடிகை முதல் முன்னணி நடிகை வரை அனைவருமே பெரும்தொகையை சம்பளமாக கேட்கிறார்கள்.

இந்நிலையில் இதுவரை புத்தாண்டு பார்ட்டியில் ஆடாத நடிகை ஆட வருகிறார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

புத்தாண்டு பார்ட்டிகளில் இதுவரை பிரியங்கா சோப்ரா டான்ஸ் ஆடியது இல்லை. இந்நிலையில் அவர் வரும் 31ம் தேதி இரவு சென்னையில் நடக்கும் புத்தாண்டு பார்ட்டி ஒன்றில் டான்ஸ் ஆடவிருக்கிறாராம்.

ரூ. 6 கோடி

ரூ. 6 கோடி

பிரியங்கா சோப்ரா புத்தாண்டு பார்ட்டியில் வெறும் 7 நிமிடங்கள் தான் டான்ஸ் ஆடுகிறார். அதற்கே அவர் ரூ.6 கோடி கேட்டுள்ளார்.

கொஞ்சம் ஓவர்

கொஞ்சம் ஓவர்

7 நிமிடம் ஆட ரூ.6 கோடி என்பது கொஞ்சம் ஓவர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தனர். ஆனால் டிக்கெட் வருமானம் மூலம் அதை சரி கட்டிவிடலாம் என்று நினைத்த அவர்கள் ரூ.6 கோடி கொடுக்க சம்மதித்துவிட்டார்களாம்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

பிரியங்காவுக்கு 31 வயது ஆனாலும் கவர்ச்சியாக உள்ளார். அவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது என்பதை மனதில் வைத்து தான் அவர் கேட்ட தொகை கொடுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X