ரசிகர்களுக்கு விருந்து வைத்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா.. எப்படியெல்லாம் ஊட்டி விடுறாங்க பாருங்க

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி உதய்பூரில் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்தில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இன்று அவர்களது திருமண ரிசப்ஷன் நடக்கிறது. இதற்கு இடைப்பட்ட நாட்களிலும் செம பிஸியாகவே அவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரண்டு பேரும் தங்கள்து ரசிகர்களுக்கு செமயான விருந்து ஒன்றை வைத்தார்கள். அதுதொடர்பான வீடியோ லைக்ஸை அள்ளிவருகிறது.

ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் கடந்த சில வருடங்களாக செய்துவந்த காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து சிம்ப்பிளாக கடந்த வருடத்தில் நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்ட அவர்கள்; பிரமாண்டமாக திருமணம் செய்வதற்கு முடிவு செய்தார்கள். அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் ஐடிசி மாளிகையில் அவர்களது திருமணம் நடந்தது. அதில் திரையுலக பிரபலங்களோ, அரசியல் பிரமுகர்களோ கலந்துகொள்ளவில்லை. தம்பதிக்கு நெருக்கமான வட்டத்தினர் மட்டுமே பங்கேற்றார்கள்.

பிஸியான ஜோடி: திருமணம் முடித்த கையோடு பல ஜோடிகள் ஒன்று ஹனிமூனுக்கு செல்லும் அல்லது அசதி காரணமாக ஓய்வு எடுக்கும். ஆனால் இவர்களோ வேறு மாதிரி இருக்கிறார்கள். மணம் முடிந்த அடுத்த நாளிலிருந்து உள்நாட்டிலேயே பெரிய ரவுண்டு வருகிறார்கள். உற்றார், உறவினர்கள் வைக்கும் விருந்துகளிலும் முகம் சுளிக்காமல் கலந்துகொண்டு அவர்களது பாசத்தை சம்பாதித்துவருகிறார்கள். சில நாட்களுக்கு முன்புகூட அவர்கள் விஜய் தேவரகொண்டாவின் சொந்த ஊருக்கு சென்று அங்கிருப்பவர்களை சந்தித்து உரையாடினார்கள்.

Newlyweds Vijay Deverakonda and Rashmika Mandanna Serve Food to Fans Video Goes Viral
Photo Credit:

விஜய் கொடுத்த வாக்குறுதி: தங்கள் ஊர் மருமகளை ஆரவாரத்தோடு வரவேற்றார்கள் அங்கிருந்தவர்கள். மேலும் அங்கிருக்கும் அரசு பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மாணவிகள் 44 பேருக்கு கல்வி உதவி தொகையை வழங்குகிறார் தேவரகொண்டா. வளர்ந்த பிறகு சொந்த ஊரை மறந்து விடும் பலருக்கு மத்தியில்; ஊருக்கு தேடி வந்து உதவி செய்யும் மனம் உடைய விஜய்யை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துவருகிறார்கள். அதேபோல் இந்தியா முழுவதும் சில கோயில்களில் அவர்கள் அன்னதானமும் வழங்கினர்கள்.

Also Read
ராதிகா செய்த அட்வைஸ்.. செம போல்டான லேடி ப்பா.. மிரட்டிட்டாங்க.. வரலட்சுமி அசந்து போய் பார்க்குறாங்க
ராதிகா செய்த அட்வைஸ்.. செம போல்டான லேடி ப்பா.. மிரட்டிட்டாங்க.. வரலட்சுமி அசந்து போய் பார்க்குறாங்க

ரசிகர்களுக்கு விருந்து: அந்த விழாவை முடித்த கையோடு அடுத்து ஒரு விழாவில் பங்கேற்றிருக்கிறது இந்த ஜோடி. அதாவது நேற்று தங்கள் ரசிகர்களை அழைத்து ராஜ விருந்தை உபசரித்திருக்கிறார்கள் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும். விருந்து வைத்தது மட்டுமின்றி ராஷ்மிகாவே தன் கைப்பட பரிமாறவும் செய்தார். அதை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு நல்ல மனதுக்காரராக இருக்காங்களே ராஷ்மிகா என உருகிப்போயினர். மேலும் ரசிகர்கள் மத்தியிலேயே அமர்ந்து சாப்பிட்ட அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டிவிடவும் செய்தார்கள். அதை பார்த்து ரசிகர்கள் சந்தோஷத்தில் கரவொலி எழுப்பினார்கள்.

இன்று ரிசப்ஷன்: முன்னதாக இன்று ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷன் நடக்கவிருக்கிறது. இதில் இந்திய திரைத்துறையிலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் சென்றிருக்கிறது. எனவே அவர்களும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டி பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X