வரலட்சுமிக்கு விலையுயர்ந்த சொகுசு கார் பரிசளித்த கணவர்.. எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

சென்னை: சரத்குமாரின் முதல் மனைவியுடைய மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் உச்சபட்ச காதலோடு தங்களது வாழ்க்கயை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். மணமுடித்த பிறகும் நடிக்கும் வருவுக்கு அவரது கணவர் ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார் போலவே அவரது மகள் வரலட்சுமிக்கும் நடிக்கும் ஆசை இயல்பிலேயே இருந்தது. ஆனால் அந்த ஆசைக்கு முதலில் முட்டுக்கட்டையாக இருந்தார் சரத். பிறகு அவரது முதல் மனைவி சாயா தேவியும், இரண்டாவது மனைவி ராதிகாவும் பேசி அவரை ஒத்துக்கொள்ள வைத்தார்கள். அதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி. அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வருவுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

பாலாவின் தாரை தப்பட்டை: சூழல் இப்படி தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாலாவின் பட்டறைக்கு சென்றால் அந்த கலைஞருக்கு கண்டிப்பாக பெயர் கிடைக்கும் என்பதற்கு அடுத்த உதாரணமாக இருந்தார் வரலட்சுமி. இருப்பினும் படம் எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை; அவருக்கும் பெரிய பெயர் எதுவும் கிடைக்கவில்லை.

ஜோராக நடந்த திருமணம்: வரிசையாக நடித்துவந்த வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். வரலட்சுமி - நிக்கோலாய் காதலில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்ட சரத்குமார் திருமணத்துக்கு சம்மதித்தார். அதனையடுத்து இருவரும் கடந்த வரும் தாய்லாந்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள்.

Nicholai gifts Varalakshmi an expensive luxury car Here are Details
Photo Credit:

தொடர்ந்து நடிப்பு: திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார் வரலட்சுமி. அவரது நடிப்பு பயணத்துக்கு நிக்கோலாயும் பக்கபலமாக இருந்துவருகிறார். அதுமட்டுமின்றி திருமணத்துக்கு பிறகு எனது பெயருக்கு பின்னால் வரலட்சுமியின் பெயரையும் சேர்த்துக்கொள்வேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது அந்தக் கருத்துக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள்.

வரலட்சுமியின் படங்கள்: வரலட்சுமியின் நடிப்பில் கடைசியாக ஃபீனிக்ஸ் திரைப்படம் வெளியானது. படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விஜய்யின் ஜன நாயகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இவை தவிர்த்து இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை வரலட்சுமிக்கு அவரது கணவர் நிக்கோலாய் சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

என்ன கிஃப்ட்: அதாவது Porsche 718 Boxster என்ற விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோவை வரலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் நிக்கோலாயுடன் வீடியோ காலில் பேசும் வரு; பரிசை பார்த்து ஆச்சரியப்படுகிறார். மேலும் சிறிது தூரம் அந்தக் காரை ட்ரைவ் செய்தும் பார்த்த காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்தக் காரின் விலை கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X