கணவர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்ட பிரியங்கா சோப்ராவின் காதலர் நிக் ஜோனஸ்!
பிரியங்கா சோப்ராவுக்காக நிக் ஜோனஸ் சொகுசு வில்லா வாங்கியுள்ளார்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரியங்கா சோப்ராவுக்காக விலையுயர்ந்த வில்லா ஒன்றை நிக் ஜோனஸ் வாங்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக காதலித்து வரும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
இவர்களின் திருமணம் நவம்பர் 30 ஆம் தேதி ஜோத்பூரில் நடைபெற உள்ளது.

நிக் ஜோனஸ்
புதுப்பொண்டாட்டி வரும் பூரிப்பில் கணவன்மார்கள் தலைகால் புரியாமல் ஆடுவார்கள். கிஃப்ட் கொடுப்பது, மனைவியை இம்ப்ரெஸ் செய்ய நினைப்பது போன்ற விஷயங்களில் பாடகர் நிக் ஜோனஸும் விதிவிலக்கல்ல. அவ்வப்போது சர்ப்ரைஸ்களை கொடுக்கும் நிக், லாஸ் ஏஞ்சல்ஸில் பிரியங்கா சோப்ராவுக்காக விலையுயர்ந்த வில்லா ஒன்றை வாங்கியுள்ளார்.

ஐந்து பெட்ரூம்
4129 சதுர அடி உள்ள வில்லாவில், ஐந்து படுக்கை அறை, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் என சகல சொகுசு வசதிகளும் உள்ளன. நம்ம ஊரு ஆட்கள் ஒரகடத்தில் வீடு வாங்குவதுபோல பிரியங்காவுக்கு புரபோஸ் பண்ணிய மூன்று மாதத்தில் இந்த வில்லாவை வாங்கிவிட்டார்.

6.5 மில்லியன்
இவ்வளவு சொகுசாக இருக்கும் வில்லா என்ன விலை இருக்கும் என வாயைப் பிளக்க வேண்டாம். சில்லறை காசு வெறும் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்தானாம். (டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குதிரை போல் குதிப்பதால், அதை கணக்கிடும் பணியை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள் பாஸ்)

வாழ்த்துங்கள்
திருமணத்திற்குப் பிறகு இந்த வில்லாவிற்குத்தான் குத்துவிளக்கேற்றப்போகிறார் பிரியங்கா சோப்ரா. இந்த வில்லா பற்றி கேட்டதும் லைட்டா வயித்தெரிச்சல் இருக்கத்தான் செய்யும், ஆனாலும் நம்ம ஊரு பொண்ணு போற இடத்துல நல்லா இருக்கனும்னு வாழ்த்துங்க. பல் இருக்கவன் பகோடா சாப்பிடுறான், பல் இல்லாதவன் பஞ்சாமிர்தத்தை டேஸ்ட் பண்ணுறான்ன தத்துவமெல்லாம் பேசாதிங்க ஃப்ரெண்ட்ஸ்.


Click it and Unblock the Notifications











