கும்முன்னு இருந்தா கோவில் கட்டிருவோம்ல.. அப்படியே ஸ்வீட் ஷாக் ஆன நிதி அகர்வால்!

சென்னை : கோலிவுட்டில் பிரபல நடிகர், நடிகைகளுக்கு அவர்களின் ரசிகர்கள் கோயில் கட்டுவது ஒன்றும் புதியதல்ல. எம்ஜிஆர், குஷ்பு, நமீதா, ஹன்சிகா என பலருக்கும் அவர்களின் ரசிகர்கள் கோயில் கட்டி உள்ளனர்.

சமீபத்தில் நயன்தாராவுக்கும் அவரது ரசிகர் ஒருவர் கோயில் கட்டி இருந்தார். அந்த வரிசையில் தற்போது, தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்த நிதி அகர்வாலுக்கும் அவரது ரசிகர்கள் கோயில் கட்டி உள்ளனர்.

Nidhhi Agerwal gets a temple, says shes shocked but overwhelmed

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தமிழில் பூமி, ஈஸ்வரன் ஆகிய 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கிலும் 2 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். தற்போது தான் தமிழில் 3 வது படத்தில் நடித்து வருகிறார். அதற்குள் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.

இது பற்றி நிதி அகர்வால் கூறுகையில், இது எனக்கு காதலர் தின பரிசு என அவர்கள் கூறினர். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. ஷாக் ஆகிட்டேன். ஆனால் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த கோயில் எங்கிருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் சென்னையில் உள்ளது என்று மட்டும் சொன்னார்கள். எனது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் தான் இதனை செய்துள்ளனர்.

எனக்கு முறையான ரசிகர் மன்றம் கூட கிடையாது. நான் சமூக வலைதளங்களில் தான் ரசிகர்களுடன் பேசி வருகிறேன். நான் எனது பேட்டிகளில் கூட குழந்தைகள் மற்றும் நாய்களை பாதுகாப்பது பற்றி தான் பேசி உள்ளேன். அதனால் அவர்கள் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கியது தெரியும்.

ஆனால் இது எதிர்பார்க்காதது. அவர்களின் அன்புக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது போன்ற ரசிகர்கள் கிடைத்தது மகிழ்ச்சி. விரைவில் பவன் கல்யாணுடன் ஒரு படம் நடிக்க உள்ளேன். அதற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின், மகிழ் திருமேனி இணையும் படத்தில் நடிக்க உள்ளேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X