பெருமை.. என் வாழ்க்கையை பல வழிகளில் மாற்றிய படம் அதுதான்.. நெகிழ்ச்சியில் ஜெயம் ரவி ஹீரோயின்!

By

ஐதராபாத்: என் வாழ்க்கையை பல வழிகளில் மாற்றிய படம் அதுதான் என்று ஜெயம் ரவி பட ஹீரோயின் நெகழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக பூமி படத்தில் நடித்து வருகிறார், நிதி அகர்வால். இதை லக்‌ஷ்மண் இயக்குகிறார்.

இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நிதி அகர்வால்.

ஐஸ்மார்ட் சங்கர்

ஐஸ்மார்ட் சங்கர்

பின்னர் தெலுங்குக்கு வந்த இவர், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் ஹிட்டாகவில்லை. அடுத்து, ஐஸ்மார்ட் சங்கர் என்ற படத்தில் நடித்தார். ராம், ரபா நடேஷ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. புரி ஜெகநாத் இயக்கி இருந்தார். அவரும் நடிகை சார்மியும் இணைந்து தயாரித்திருந்தனர். ஐமார்ட் சங்கர் படம் ரிலீஸ் ஆகி இன்றோடு ஒருவருடம் ஆகிவிட்டது.

புரி ஜெகநாத்

புரி ஜெகநாத்

லாக்டவுன் காரணமாக இதை படக் குழுவால் கொண்டாட முடியவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் அதுபற்றி குறிப்பிட்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில், இயக்குனர் புரி ஜெகநாத் கூறும்போது, ஒரு வருடத்துக்கு முன் இதே நாள் கொண்டாட்டமாக இருந்தது. கடின உழைப்பாளியான தயாரிப்பாளர் சார்மிக்கு நன்றி' கூறியுள்ளார்.

நானும் இருந்தேன்

நானும் இருந்தேன்

இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை சார்மி, இன்னும் தொடர்ந்து 10 வருடத்துக்கான ஸ்கிரிப்ட்களும் பல பிளாக்பஸ்டர்களும் தயாராகி வருகின்றன என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிதி அகர்வால் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் நானும் இருந்தேன் என்பது எனக்குப் பெருமை. எனது கனவு இயக்குனர்கள் லிஸ்டில் புரி ஜெகநாத்தும் ஒருவர்.

நீண்ட ஹாலிடே

நீண்ட ஹாலிடே

இந்தப் படம் பல வழிகளில் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் என் நடிப்பை புகழ்ந்தார்கள். புரி ஜெகநாத் இயக்கத்தில் நடிப்பது ஒரு நீண்ட ஹாலிடே மாதிரி உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் கற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் போட்டோவுடன் பதிவிட்டிருந்தார். தமிழில் அதிகக் கவனம் செலுத்த தமிழ்க் கற்று வருவதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X