கொரோனா வைரஸ் விழிப்புணர்வாம்.. கையை கழுவுறது இருக்கட்டும்.. முதல்ல மூட வேண்டியதெல்லாம் மூடுங்க!
சென்னை: ஜெயம் ரவியின் பூமி படத்தில் நடித்து வரும் நடிகை நிதி அகர்வால், ஹாட் புகைப்படத்துடன் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வந்த நிதி அகர்வால், ஜெயம் ரவி நடிப்பில் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ள பூமி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
சினிமா பிரபலங்கள் பலரும், கொரோனா குறித்து விழிப்புணர்வு பதிவுகளை பதிவிட்டு வரும் நிலையில், நிதி அகர்வாலும் தன் பங்குக்கு ஒரு விழிப்புணர்வு போஸ்ட் போட்டுள்ளார்.

உச்சகட்ட கவர்ச்சி
ஆனால், அந்த புகைப்படத்திற்கும், கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கிறதா என்று பார்த்தால், கடுகு அளவுக்கு கூட இல்லை. ஆனால், கோலிவுட் ரசிகர்களை கவரும் விதமாக, தொடர்ந்து, ஹாட் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களாக தனது இன்ஸ்டா பக்கத்தில் நிதி பதிவிட்டு வருகிறார்.

கைகளை கழுவுங்க
தனது முன்னழகு முழுவதும் வெளியே எட்டிப் பார்க்கும் விதமாக, தம்மாத்துண்டு மேலாடையை அணிந்து கொண்டு, உச்சகட்ட கவர்ச்சியில் நிதி அகர்வால் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் கொடுக்கலாம் என்று யோசித்த அவர், இப்போ கொரோனா தான் டிரெண்டிங்கில் இருக்கிறது. அதனால், "கைகளை சுத்தமாக கழுவுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

பிங்க்
பாலிவுட்டில் வெளியான முன்னா மைக்கேல், டோலிவுட்டில் வெளியான மிஸ்டர் மஜ்னு, சவ்யாசாச்சி மற்றும் ஐ ஸ்மார்ட் ஷங்கர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால், பிங்க் நிற உடையணிந்து, ரசிகர்களை வசீகரிக்கும் போதை ஏற்றும் கண்களுடன், செம கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் எக்கச்சக்க லைக்குகளை பெற்று வருகின்றன.

ஜெயம் ரவியுடன்
டோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து, கோலிவுட்டில், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பூமி படத்தில் நாயகியாக நடித்துள்ளார் நிதி அகர்வால், விவசாயத்தை மையப்படுத்திய படமாக உருவாகி வரும் பூமி படத்தில், சேலை கட்டி கிராமத்து பெண்ணாக நடித்துள்ள நிதியை, இன்ஸ்டா பக்கம் பார்த்தால், அரையும் குறையுமாகத்தான் திரிகிறார்.

மாஸ்க் போடுங்க
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நடிகை நிதி அகர்வாலை பார்த்து, ரசிகர்கள் முதலில் மாஸ்க்கை போடுங்க அப்புறம் உங்களுக்கு அந்த வைரஸ் பரவிட போகுது. வெளியேலாம் போகாதீங்க பார்த்து ஜாக்கிரதையாக இருங்க என கரிசணத்துடன் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











