லாக்டவுனை வேஸ்ட் பண்ணலாமா? ஆன்லைனில் சினிமா கோர்ஸ்.. சத்தம் போடாமல் இணைந்த ஜெயம் ரவி பட ஹீரோயின்!

By

சென்னை: ஜெயம் ரவி பட ஹீரோயின், ஆன்லைனில் சினிமா தொடர்பான படிப்பை கற்று வருகிறார்.

Recommended Video

'Just another day all things green' - Nidhhi Agerwal shared fitness video on Instagram

ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மண், அடுத்து இயக்கும் படம், 'பூமி'. இதில் ஜெயம் ரவி ஹீரோ. நிதி அகர்வால் ஹீரோயின்.

இது அவருக்கு 25-வது படம். டி.இமான் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

ஐஸ்மார்ட் சங்கர்

ஐஸ்மார்ட் சங்கர்

நிதி அகர்வால், இந்தியில் டைகர் ஷெராப் ஜோடியாக முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். பின்னர் தெலுங்குக்கு வந்த இவர், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார். இந்தியில் அதிக வாய்ப்பில்லை. அடுத்து, ஐஸ்மார்ட் சங்கர் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். ராம், ரபா நடேஷ், நிதி அகர்வால் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

இந்தியாவில் பாதிப்பு

இந்தியாவில் பாதிப்பு

புரி ஜெகநாத் இயக்கியிருந்தார். அவரும் நடிகை சார்மியும் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த தனிமை நாட்களை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலில் ஈடுபட்டுள்ளனர்.

பிலிம் அகாடமி

பிலிம் அகாடமி

பல நடிகர், நடிகைகள் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் விதம்விதமாக சமையல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை நிதி அகர்வால், இந்த நேரத்தை தனது திறமையை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்த முடிவு செய்துள்ளார். அதன்படி நியூயார்க் பிலிம் அகாடமியில் ஆன் லைன் கோர்ஸில் இணைந்துள்ளார்.

ஸ்கிரிப்ட் ரைட்டிங்

ஸ்கிரிப்ட் ரைட்டிங்

நடிப்பு மற்றும் இயக்கம் தொடர்பான படிப்பில் அவர் இணைந்திருக்கிறார். இங்கு ஏற்கனவே இரண்டு கோர்ஸ்களை முடித்துள்ள அவர், இப்போது மூன்றாவது அமர்வில் இணைந்துள்ளார். இதன் மூலம் ஸ்கிரிப்ட் ரைட்டிங் மற்றும் இயக்கம் தொடர்பான படிப்பை அவர் கற்கிறார். இந்த அகாடமியில் பல டோலிவுட் பிரபலங்கள் ஏற்கனவே கற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X