ஃபிலிம்பேர் விழாவில் நிதி அகர்வால் செய்த கூத்து.. உடையை தூக்கிட்டு வர ஒரு ஆளா?.. என்னங்க இதெல்லாம்
கொச்சி: ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் தென்னிந்திய திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். அந்தவகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் குறிப்பிடத்தகுந்த நடிகைளில் ஒருவரான நிதி அகர்வாலும் கலந்துகொண்டார். அவர் விழாவுக்கு வரும்போது அவரது உடையை தூக்கிக்கொண்டு ஒருவர் வந்ததை வைத்து சோஷியல் மீடியாவில் நிதியை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
திரைத்துறை விருதுகளில் ஃபிலிம்பேர் விருதுகளுக்கென்று எப்போதும் தனி மதிப்பு இருக்கும். அந்த விருது பெறுவதை தங்களது கௌரவமாக நினைப்பார்கள் திரைத்துறை கலைஞர்கள். அந்த விருது வழங்கு விழா வருடா வருடம் நடக்கும். அந்தவகையில் 70ஆவது ஃபிலிம்பேர் விருது விழா கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான திரைத்துறை கலைஞர்கள் பங்கேற்றார்கள். கோலிவுட் கலைஞர்கள் ஏகப்பட்ட பேருக்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன.
படையெடுத்த பிரபலங்கள்: விருது பெறுவதற்காக மட்டுமின்றி விருது வழங்குவதற்காகவும், அந்த விழாவை பார்ப்பதற்காகவும் பல ஆர்ட்டிஸ்ட்டுகள் நேற்று கொச்சிக்கு படையெடுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற சாய் பல்லவிக்கும் எவர் க்ரீன் சிம்ரன் விருது வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடைகள் கவனம் பெறும்: இதற்கிடையே ஆஸ்கர் உள்ளிட்ட விருது வழங்கும் விழாக்கள் போல் ஃபிலிம்பேர் விருது விழாக்களிலும் நடிகைகள் அணிந்துவரும் உடைகள் எப்போதும் கவனம் பெறும். சில நடிகைகள் டீசன்ட்டாக உடை அணிந்து வருவார்கள். சிலரோ பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும்படியான உடைகளையும் அணிந்துவருவார்கள். அப்படி வருபவர்களை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கடுமையாக ட்ரோல் செய்துவிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இந்த ஃபிலிம்பேர் விருது விழாவில் நடிகை நிதி அகர்வால் அணிந்து வந்த உடையை வைத்தும், அந்த உடையால் அவர் செய்த செயல் ஒன்றையும் ரசிகர்கள் ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
என்ன நடந்தது?: அதாவது நிதி அகர்வால் இந்த விழாவுக்கு ஷீர் கார்செட் கவுனை அணிந்துவந்தார். அந்த உடை ரொம்பவே நீளமாக இருந்ததன் காரணமாக அதன் ட்ரெயல் பகுதியை ஒருவர் பிடித்துக்கொண்டு வந்தார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, என்னது இது தரையை கூட்டும்படி ஒரு ஆடையை நிதி அணிந்து வந்திருக்கிறார். அதை தாங்கி பிடித்துக்கொள்ள ஒருவர் வேறு இருக்கிறார். அவரது நிலைமைதான் ரொம்பவே மோசம் என்று கமெண்ட்ஸ் செய்து கடுமையாக ட்ரோல் செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.
நிதி அகர்வாலின் கரியர்: முன்னதாக, நிதி அகர்வால் தமிழ், தெலுங்கு மொழிகளில் சொல்லிக்கொள்ளும்படியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடைசியாக அவர் தெலுங்கில் ராஜாசாப் படத்தில் நடித்திருந்தார். தமிழை பொறுத்தவரை ஈஸ்வரன், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் சிம்புவுடன் அவரை இணைத்து காதல் கிசுகிசு கிளம்பியதும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











