லாக் டவுனால் கிச்சனுக்குள் வந்த பிரபல ஹீரோயின்கள்.. வீட்டில் கேக் தயாரித்த ஜெயம் ரவி ஹீரோயின்!

By

சென்னை: லாக்டவுன் நேரத்தில் வீட்டில் கேக் தயாரித்துள்ளதாக, ஜெயம் ரவி ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Tamannaah Bhatia Healthy Breakfast Recipe | Lock Down

ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மண் இயக்கும் 'பூமி' படத்தில் நடித்து வருகிறார் நிதி அகர்வால். இதில் ஜெயம் ரவி ஹீரோ.

இது அவருக்கு 25-வது படம். டி.இமான் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

ஐஸ்மார்ட் சங்கர்

ஐஸ்மார்ட் சங்கர்

நிதி அகர்வால், இந்தியில் டைகர் ஷெராப் ஜோடியாக முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். பின்னர் தெலுங்குக்கு வந்த இவர், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்தார். இந்தியில் அதிக வாய்ப்பில்லை. அடுத்து, ஐஸ்மார்ட் சங்கர் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். ராம், ரபா நடேஷ், நிதி அகர்வால் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

இந்தியாவில் பாதிப்பு

இந்தியாவில் பாதிப்பு

புரி ஜெகநாத் இயக்கியிருந்தார். அவரும் நடிகை சார்மியும் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள், நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். வரும் 14 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை போல இந்தியாவிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கிச்சனுக்குள்

கிச்சனுக்குள்

அந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பாதிப்பு குறைவுதான். இந்நிலையில், நாடு ஊரடங்கில் இருக்கும் நிலையில், பல நடிகர், நடிகைகள் வீட்டு வேலைப் பார்க்கத் தொடங்கி உள்ளனர். இதற்கு முன் வேலைக்காரர்கள் பார்த்துக்கொள்வார்கள். இப்போது அப்படி இல்லை என்பதால் சில ஹீரோயின்கள் கிச்சனுக்குள் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.

கேக் தயாரிப்பு

அதன்படி நடிகை நிதி அகர்வால், முதன் முறையாக, வீட்டில் கேக் தயாரிக்கக் கற்றிருக்கிறார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தன்வி அகர்வால் என்பவர் உதவியுடன் இந்த கேக்கை அவர் தயாரித்திருக்கிறாராம். அதில் எப்படியெல்லாம் இந்த கேக்கை செய்தேன் என்றும் நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் இல்லையே

ஆதாரம் இல்லையே

இதைக் கண்ட ரசிகர்கள் நீங்க கையில வச்சிருக்கிறத பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கே என்று கூறியுள்ளனர். சிலர், அந்த ரெசிபியை அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டுள்ளனர். சிலர், இதை நாங்க எப்படி நம்பறது? நீங்கதான் செஞ்சீங்க அப்படிங்கறதுக்கு ஆதாரமே இல்லையே?' என்று கேட்டுள்ளனர்.

எங்களுக்கு

எங்களுக்கு

இந்த, லாக் டவுன் எல்லா ஹீரோயின்களையும் கிச்சனுக்கு கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். ஒரு ரசிகர், 'எல்லாத்தையும் தனியாவே தின்னுட்டீங்களா, எங்களுக்கு? என்று கேட்டிருக்கிறார். நிதி அகர்வாலின் இந்த போஸ்டை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கமென்ட் அடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X