கொரோனா நிவாரண நிதி வழங்கிய பூமி பட நடிகை!

சென்னை : பூமி, ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.

தற்போது மகிழ்திருமேனி இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ள இவர் கொரோனா பேரிடர் நிவாரண தொகை அளித்துள்ளார்.

பிளாக்பஸ்டர் வெற்றி

பிளாக்பஸ்டர் வெற்றி

இந்தியில் வெளியான முன்னா மைக்கேல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதன்முறையாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நிதி அகர்வால் அதைத் தொடர்ந்து தெலுங்கில் நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றிபெற இவரை அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து விட்டது தமிழ் சினிமா.

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில் இரண்டு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி நிதி அகர்வாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி என இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் கடந்த பொங்கல் அன்று வெளியானது.

மகிழ்திருமேனி இயக்கத்தில்

மகிழ்திருமேனி இயக்கத்தில்

இதில் பூமியை நேரடியாக ஓ டி டி தளத்திலும, ஈஸ்வரன் திரையரங்குகளிலும் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. அறிமுகமான முதல் இரண்டு திரைப்படத்திலேயே கவர்ச்சியில் எந்த அளவுக்கு தாராளம் காட்ட முடியுமோ காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியதோடு இப்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சரித்திர திரைப்படமாக

சரித்திர திரைப்படமாக

தெலுங்கில் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் "ஹரிஹரா வீரா மல்லு" என்ற பிரமாண்ட திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதிக பொருட்செலவில் சரித்திர திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இப்போதுள்ள கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

நிதி உதவிகளை

நிதி உதவிகளை

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அதிதீவிரமாக பரவி பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தன்னார்வலர்கள் தொழிலதிபர்கள் திரைப் பிரபலங்கள் மக்கள் என அனைவரும் பாரபட்சம் பாராமல் தங்களால் முடிந்த நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் குமார்,விக்ரம், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஷங்கர் என பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நிவாரணத் தொகையை வழங்கியிருந்தனர்.

ரசிகர்களிடம் பாராட்டு

ரசிகர்களிடம் பாராட்டு

அந்த வகையில் நடிகை நிதி அகர்வாலும் தற்பொழுது கொரோனா பேரிடர் நிவாரண தொகையாக 1 லட்சம் ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளது ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் இதே போல பல திரை பிரபலங்களும் முன்வந்து நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X