Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தழுக் மொழுக் உடையில் தளதளன்னு இருக்கும் ஈஸ்வரன் பட நடிகை!
சென்னை : சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்களில் நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.
மகிழ் திருமேனியின் சூப்பர் திரில்லர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மஹா
சமுத்திரம்
புது
போஸ்டருடன்
முக்கிய
அப்டேட்டை
வெளியிட்ட
நடிகர்
சர்வானந்த்!
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் ஜோடி சேர்ந்துள்ள நிதி அகர்வால் இப்பொழுது தழுக் மொழுக் உடையில் தளதளன்னு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

தமிழில் அறிமுகமானார்
ரோமியோ ஜூலியட், போகன் என இரண்டு வெற்றிகளை கொடுத்த லக்ஷ்மணன், ஜெயம் ரவி கூட்டணி மூன்றாவதாக இணைந்து திரைப்படம் பூமி. விவசாயத்தை மையக்கருவாக கொண்டு உருவான இந்த திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருந்தது. சில சூழ்நிலைகள் காரணமாக ஓடிடியில் நேரடியாக வெளியானது இதில் நடிகை நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

செம ஹேப்பி
வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்குப் பிறகு உடல் எடையை குறைத்த சிம்பு செம கெத்தா பழைய சிம்பு மாதிரி ஸ்லிம்மாக மாறி நடித்திருந்த ஈஸ்வரன் பொங்கலுக்கு திரையில் வெளியாகி செம கல்லா கட்டியது ரசிகர்களும் செம ஹேப்பி ஆயினர். இந்த படத்திலும் நடிகை நிதி அகர்வால் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

த்ரில்லர் கதையில்
ஒரே நேரத்தில் தமிழில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகி நிதி அகர்வாலுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில் இப்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் சூப்பரான த்ரில்லர் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.சூப்பரான த்ரில்லர்

நெய் குழந்தை மாதிரி
தெலுங்கிலும் நிதி அகர்வாலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்க இப்பொழுது பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படம் விறுவிறு வேகத்தில் உருவாகிவருகிறது. விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வர இருக்கும் நடிகை நிதி அகர்வால் இப்பொழுது தழுக் மொழுக் உடையில் தளதளன்னு உருட்டி வைத்த நெய் குழந்தை மாதிரி இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம குஷியாகி வர்ணித்து வருகின்றனர்.