இவர்தாங்க அவர்.. தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை.. காதல் திருமணம் இல்லையாமே!
சென்னை: பிரபல நடிகை, தனது வருங்கால கணவரை சமூக வலைத்தளத்தில் அறிமுகம் செய்துள்ளார்.
தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர், தெலுங்கு நடிகை நிஹரிகா கொனிடெலா.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடித்திருந்தனர். நிஹரிகா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள்.

தயாரிப்பு நிறுவனம்
நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் நிஹரிஹா, 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'பிங்க் எலிபேன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கெனன்யா பிலிம்ஸ்
இப்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்கிறார். ஸ்வாதினி இயக்கும் இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. நடிகை நிஹரிகாவுக்கும் பிரபாஸுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக வதந்திகள் வெளியாயின. இந்நிலையில் நிஹரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக அவர் தந்தை நாகபாபு தெரிவித்திருந்தார்.

மாப்பிள்ளை
இதற்கிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று முன்தினம் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் நடிகை நிஹரிகா. அதில், ஒரு காஃபி கப்பில், மிஸ் என்பதை அடித்துவிட்டு மிசஸ்? என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும் தனது திருமணம் பற்றிதான் அவர் இப்படி கூறியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

நிச்சயதார்த்தம்
இதனால் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். பிறகு இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அவர் முகத்தை அதில் காண்பிக்கவில்லை. இதற்கும் நடிகர், நடிகைகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் இன்னொரு பதிவில் அவரது முகம் தெரியும்படி போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

தேதி முடிவில்லை
அந்த இளைஞர், ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பதை நிஹரிகா தெரிவித்துள்ளார். இருவருக்குமான திருமணத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது பெற்றோர்களால் பேசி முடிக்கப்பட்டுள்ள திருமணம். ஆகஸ்ட் மாதம் இவர்கள் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











