தன்னை பற்றிய உண்மையை பப்ளிக்கா சொன்ன விஜய் சேதுபதி ஹீரோயின்
Recommended Video

ஹைதராபாத்: நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என்று நடிகை நிஹாரிகா கொனிடெலா தெரிவித்துள்ளார்.
மெகா குடும்பத்தில் இருந்து வந்துள்ள முதல் நடிகை நிஹாரிகா கொனிடெலா. நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள். தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் மூலம் கோலிவுட் வந்தார்.
அவர் நடித்துள்ள சூர்யகாந்தம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

நிஹாரிகா
பிரனீத் இயக்கத்தில் ராகுல் விஜய் ஹீரோவாக நடித்துள்ள சூர்யகாந்தம் படம் முக்கோண காதல் பற்றியது. படத்தை பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளதுடன் நிஹாரிகாவையும் வாழ்த்தியுள்ளனர்.

நிஹாரிகா
பிரனீத் கதை சொன்னதுமே எனக்கு பிடித்துவிட்டது. சூர்யகாந்தம் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தேன். அந்த படத்தில் வரும் பப்ளி கதாபாத்திரம் நிஜத்தில் என் குணத்துடன் ஒத்துப் போகும் என்கிறார் நிஹாரிகா.

தயாரிப்பு
நான் இன்னும் சில ஆண்டுகள் நடித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு என் தந்தையின் பட தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொள்ள விரும்புகிறேன். படங்களை தயாரிப்பதில் என் தந்தைக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன் என்று நிஹாரிகா தெரிவித்துள்ளார்.

சினிமா
திரைத்துறையில் இருக்க ஒரு பெண் ஹீரோயினாகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை என நான் நம்புகிறேன். நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை. அதனால் கிளாமரான கதாபாத்திரங்கள், வாழ்க்கையையே மாற்றும் ஸ்க்ரிப்டுகளை எதிர்பார்க்கவில்லை என்று நிஹாரிகா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











