கல்யாணத்துக்கு ஒரு நாள்தானே இருக்கு.. அம்மாவின் நிச்சயதார்த்த புடவை அணிந்து விழாவில் பங்கேற்ற நடிகை

By

ஐதராபாத்: அம்மாவின் நிச்சயதார்த்த புடவையை அணிந்தபடி, திருமணத்துக்கு முந்தைய விழாவில் பிரபல நடிகை கலந்துகொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானவர், நடிகை நிஹரிகா.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர், பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாபுவின் மகள்.

நட்சத்திர ஓட்டல்

நட்சத்திர ஓட்டல்

மெகா குடும்பத்து நடிகையான இவருக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

ஆடம்பர ஓட்டல்

ஆடம்பர ஓட்டல்

இவர்கள் திருமணம் வரும் 9 ஆம் தேதி நடக்கிறது. உதய்பூரில் உள்ள ஆடம்பரமான ஓபராய் உடைவிலாஸ் அரண்மனை ஓட்டலில் 9 ஆம் தேதி மாலை 7.15 மணிக்குத் திருமணம் நடக்கிறது. பிறகு டின்னருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடுகளை நிஹரிகாவின் சகோதரரும் தெலுங்கு ஹீரோவுமான வருண் தேஜ் கவனித்து வருகிறார்.

அம்மா புடவை

அம்மா புடவை

திருமணத்துக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், திருமணத்துக்கு முந்தைய விழாவில் நேற்று கலந்துகொண்டார். அதாவது, மணமகளை திருமணத்துக்குத் தயார்படுத்தும் Pellikuthuru விழா நடந்தது. இதில், தனது அம்மாவின் நிச்சயதார்த்த புடவையை அணிந்து நிஹரிகா கலந்துகொண்டார்.

மகள் தேவதை

மகள் தேவதை

இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நிஹரிகா, '32 வருடத்துக்கு முன் என் அம்மாவின் நிச்சயதார்த்த போட்டோ' என்று அந்தப் புகைப்படத்தையும் தனது புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதற்கு நிஹரிகாவின் தந்தை நாகபாபு, இந்த போட்டோவில் என் மனைவி அழகாக இருக்கிறார். என் மகள் தேவதை போல இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதற்கிடையே திருமணத்தை முன்னிட்டு இவர்களின் குடும்பத்தினரும் உதய்பூர் சென்றுள்ளனர். இந்த திருமணத்தில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா உட்பட அவர்கள் குடும்பத்தினரும் கலந்துகொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X