Just In
- 4 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 4 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 4 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 6 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன இப்படி முடிவெடுத்திட்டாரு...டாப் ஹீரோக்கள் கண்டுக்கலயாம்...சொந்த ஊருக்குப் பறந்த ஹீரோயின்!
சென்னை: பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், தமிழ் சினிமாவை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி விட்டார் பிரபல ஹீரோயின்
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்த தெலுங்கு படம் புலி. இதில் ஹீரோயினாக அறிமுகமானவர், நடிகை நிகிஷா படேல்.
குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், பிறந்து வளர்ந்தது எல்லாம் லண்டனில். தெலுங்கு, கன்னடத்தில் சில படங்களில் நடித்தவர் அடுத்து, தமிழுக்கு வந்தார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்
கவுதம் கார்த்திக் நடித்த, என்னமோ ஏதோ, கரையோரம், நகுலுடன் நாரதன், அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் உட்பட சில படங்களில் நடித்தார். இப்போது எழில் இயக்கி உள்ள, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜிவி.பிரகாஷூடன் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஊருக்கே திரும்பினார்
இதற்கிடையே தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு இல்லாததால், இங்கிலாந்துக்கே அவர் திரும்பி விட்டார். அங்கு மீண்டும் நடிப்பு பயிற்சிப் பெற்றதாகவும் பிரிட்டீஸ் சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பதற்காக, ஆடிசன்களில் கலந்து கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபறறி நிகிஷா படேல் மேலும் கூறியிருப்பதாவது:

பெரிய ஹீரோக்கள்
'இது கடினமான முடிவுதான். வேறு வழியில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 25-க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டேன். போரடித்துவிட்டது. நான் இந்தியில் பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. பாலிவுட் தென்னிந்திய நடிகர்களையும் படங்களையும் பாராட்டுகிறது. ஆனால், மதிப்பதில்லை.

தவறான முடிவுகள்
தமிழ், தெலுங்கில் பெரிய ஹீரோ படங்களில்தான் நடிக்க வேண்டும் என்று முதலில் நினைத்தேன். தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்தேன். பிறகு வழியில்லாமல் சின்ன பட்ஜெட் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். சில தவறான முடிவுகளை எடுத்தேன். நான் கடினமாக உழைத்தாலும் எனது படங்கள் அதிகமாக விமர்சிக்கப்பட்டன.

மிகை நடிப்பு
நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இதனால், லண்டனுக்குத் திரும்பி விட்டேன். அது என் சொந்த ஊர். தென்னிந்திய படங்களில் நடித்து எனது நடிப்பை அங்குள்ளவர்கள் ஏற்கவில்லை. மிகை நடிப்பாக இருக்கிறது என்றும் இயல்பாக இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள். இதையடுத்து இரண்டு மாதம் பயிற்சி எடுத்தேன். அது எனக்கு உதவுகிறது' என்று தெரிவித்துள்ளார்.