Vaazhai: வாழை படத்துக்குப் பிறகு “அழகிய லைலா”வை மறந்துடுவீங்க.. நிகிலா விமல் பண்ண அடுத்த சம்பவம்!

சென்னை: பாக்ய தேவதா எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 2009ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிகிலா விமல். அதன் பின்னர், மலையாளத்தில் 2015ம் ஆண்டு வெளியான லவ் 24/7 படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 2016ம் ஆண்டு தமிழில் வெளியான வெற்றிவேல் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

வெற்றிவேல், கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத், ரங்கா, போர் தொழில் உள்ளிட்ட படங்களில் நடித்த நிகிலா விமல் இன்று வெளியான வாழை படத்தில் பூங்கொடி டீச்சராக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Vaazhai Nikhila Vimal

மலையாள நடிகையான நிகிலா விமல் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான குருவாயூர் அம்பலநடையில் படம் அவருக்கு தென்னிந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுத் தந்தது. கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் அதிகரிக்க காரணமே அந்த படத்தில் இடம்பெற்ற அந்த "அழகிய லைலா" பாடல் தான்.

அழகிய லைலா: தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும் இன்னமும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு நிகிலா விமலுக்கு கிடைக்கவில்லை. மலையாளத்தில் பிருத்விராஜ் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். "அழகிய லைலா" பாடலுடன் இவரை அந்த படத்தில் காட்டிய நிலையில், மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றது. அதற்கு இந்த பாடலும் நிகிலா விமலும் முக்கிய காரணமாக அமைந்தனர்.

Vaazhai Nikhila Vimal

பூங்கொடி டீச்சர்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தில் பூங்கொடி டீச்சராக நடித்துள்ளார் நிகிலா விமல். பூங்கொடி பெயர் வரும் பாடல்களை சிவனணைந்தான் பாடும் காட்சிகளும் டீச்சரை விரும்பும் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் டீச்சர் மீது காதல் வயப்பட்டாலும், டீச்சர்கள் மாணவர்களை எப்படி பார்ப்பார்களோ, எப்படி நடத்துவார்களோ, எப்படி அன்பாக அணுகுவார்களோ அதே போல நடித்து அசத்தியுள்ளார் நிகிலா விமல்.

Vaazhai Nikhila Vimal

அழகிய லைலாவை மறந்துடுவீங்க: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தில் ஆண்டு விழாவுக்காக பயிற்சி கொடுக்கும் போது பூங்கொடி டீச்சரான நிகிலா விமல் "பஞ்சுமிட்டாய் சேலை கட்டி" பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருப்பார். அந்த பாடலை தியேட்டரில் ரசிகர்கள் பார்த்து விட்டால் அதன் பின்னர், அழகிய லைலாவை டிஸ்சார்ஜ் செய்து விட்டு "பஞ்சுமிட்டாய் சேலை கட்டி" பாட்டுக்கு நிகிலா விமல் ஆடிய நடனத்தை ரசிகர்கள் ஹார்ட்டுக்குள் அட்மிட் செய்து விடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X