14 முறை திருமணம்.. அதை நினைச்சாலே வெறுப்பா இருக்கு..மலையாள நடிகை பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் சசிகுமார் நடித்த வெற்றிவேல் என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மலையாள நடிகையான நிகிலா விமல். அந்த படத்தை தொடர்ந்து கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ரங்கா, போர் தொழில், வாழை என பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நிகிலா விமல், ஆனந்தன் காடு என்கின்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.
நிகிலா விமலின் நடிப்பில் 'பென்னு கேஸ்' என்கிற மலையாள திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் மோசடியாக திருமணம் செய்து பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடும், ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார்.

நிகிலா பேட்டி: இந்த படத்தில் நடித்தது குறித்து, அண்மையில் பேட்டி அளித்த நிகிலா விமல், இந்த படத்தில் 15 முதல் 16 வரை திருமணங்கள் வரை எனக்கு நடக்கும். ஒவ்வொரு திருமண காட்சிக்கும் மணப்பெண்ணாக தயாராவது பெரிய போராட்டமாக இருக்கும். நிஜ வாழ்க்கையில் திருமண பெண்ணாக ரெடியாவதே சவாலாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்காக 14 முறை பல விதமான புடவைகள், மேக்கப் மற்றும் ஆபரணங்களை அணிந்து மணப்பெண்ணாக ரெடியாவது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இப்போது எனக்கு நிஜமாகவே திருமணம் நடந்தால் கூட அது எனக்கு உற்சாகமாக இருக்குமா என்பது தெரியவில்லை என நிகிலா விமல் அந்த பேட்டியில் நகைச்சுவையாக பேசி உள்ளார்.
வித்தியாசமான படம்: பென்னு கேஸ் என்கிற மலையாளத் திரைப்படம் ஜனவரி 10ந் தேதி வெளியானது. இப்படத்தை ஃபெபின் சித்தார்த் இயக்கினார். மேலும், இப்படத்தில் நிகிலா விமல், ஹக்கிம் ஷாஜஹான், அஜு வர்கீஸ் மற்றும் ரமேஷ் பிஷாரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நிகிலா விமல், பல ஆண்களை ஆசை வார்த்தை பேசி அவர்களை நம்பவைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணத்துடன் தப்பித்து செல்கிறாள். கலகலப்பான நகைச்சுவை படமான இப்படம் உலக அளவில் ₹1.91 கோடி வசூலித்துள்ளது.


Click it and Unblock the Notifications











