க்ளோஸ் நெக்.. புது மாடல் ஜாக்கெட்.. மொத்தமாக மூடிய நூதன டிரஸ்.. புதுஸ்ஸா இருக்கே!

சென்னை : நிகிலா விமல் வித்தியாசமான சேலை அலங்காரத்துடன் போட்டோசூட் நடத்தியிருக்கிறார்.

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறந்த படங்களில் நடித்து வருகிறார் நிகிலா விமல். இவர் கடைசியாக தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தம்பி படத்தில் நடித்து இருந்தார்.

 Nikhila vimal photoshoots

தற்போது நிகிலாவிமல் வித்தியாசமான சேலை அலங்காரத்துடன் போட்டோசூட் நடத்தியிருக்கிறார். இவரின் உடையலங்காரம் பார்பவர்களை ஒரு நிமிடம் சிந்திக்க வைத்து விடுகிறது என்று கூட சொல்லலாம்.

க்ளோஸ் நெக், கருப்பு முழுசட்டை போல புது மாடல் ஜாக்கெட் அணிந்து, அதன்மேல் சேலையும் என்று மாறுபட்ட ஆடை வடிவமைப்பில் போட்டோசூட் செய்து இருக்கிறார். இந்த ஆடைக்கு ஏற்ற சரியான அணிகலன்களும் அதற்கு ஏற்ற இடத்திலும் போட்டோக்களை எடுத்து இருக்கிறார் நிகிலா .

 Nikhila vimal photoshoots

இந்த போட்டோக்களில் நிகிலா விமல் மிகவும் எதார்த்தமான தோற்றத்திலே இருக்கிறார். இந்த போட்டோகளை பார்த்த ரசிகர்கள் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். நிகிலாவிமலின் லுக்குகள் மிகச்சிறப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நிகிலா விமல் தமிழில் வெற்றிவேல் படத்தில் சசிகுமாருடன் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன்பின் மீண்டும் கிடாரி படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தொடர் வெற்றியையும் பதிவு செய்தார். மேலும் தொகுப்பாளர் மா.கா.பா நாயகனாக நடித்து அசத்திய பஞ்சுமிட்டாய் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருந்தார் .

 Nikhila vimal photoshoots

ஒரு யேமந்தான் பிரமகதா என்ற மலையாள படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் நிகிலா இதன்பின் அஞ்சாம் பதிரா படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

மலையாளம் மற்றும் தமிழில் நல்ல படங்களில் நடித்து வரும் நிகிலா தெலுங்கில் இரு படங்களில் நடித்து இருந்தார். ஒன்று மலையாள படமான ஒரு வடக்கன் செல்பி ரீமேக் மற்றும் மோகன் பாபுவின் காயத்ரி இந்த இரு படங்களும் சரியான வெற்றி பெறாததால் தெலுங்கில் நிகிலாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .

 Nikhila vimal photoshoots

தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நிகிலா. மணியாரியிலே அசோகன் மற்றும் தி ப்ரீஸ்ட் ஆகிய மலையாள படங்களிலும் சிபிராஜ் நடிக்கும் ரங்கா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X