அச்சச்சோ.. தொடை முழுவதும் ஊசி.. அந்த மாடல் அழகிக்கு என்ன ஆச்சு?.. வலி தாங்க முடியலைன்னு கதறுறாரே!

மும்பை: சப்ஸ்டன்ஸ் படத்தில் ஊசிக் குத்தி இளமையாக மாற வயதான டெமி மூர் செய்வது போல ஏதாவது முயற்சி செய்கிறாரா அந்த பிரபல மாடல் அழகி நிகிதா ஷர்மா என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். தனது கீழ் முதுகு முதல் கால் வரை பல ஊசிகளை குத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு பதற வைத்துள்ளார்.

டெட் எக்ஸ் மற்றும் கல்ச்சுரல் அம்பாசிடராக செயலாற்றி வரும் இன்ஸ்டாகிராம் மாடல் அழகி நிகிதா ஷர்மாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 8.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். சுமார் 85 லட்சம் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ள சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸரான நிகிதா ஷர்மாவின் அழகை பார்த்து பாலிவுட் நடிகைகளே வாய் பிளந்துள்ளனர்.

nikita sharma health heroine

கவர்ச்சி கடலாக காட்சியளித்து இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்து வந்த நிகிதா ஷர்மாவுக்கு திடீரென தற்போது முதுகு பகுதிக்கு கீழ் தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வலியை தாங்கிக் கொண்டு சீக்கிரமே அதிலிருந்து மீண்டு வருவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

கவர்ச்சிக் கடல்: 8.5 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈட்டுவது என்பது லேசு பட்டக் காரியமில்லை. பல முன்னணி நடிகைகளே 4 மில்லியன் ஃபாலோயர்களை அள்ளவே தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வருகின்றனர். ஏகப்பட்ட பிகினி போட்டோக்களை போட்டும் ஒன்றும் பெரிதாக கிடைக்கவில்லை. ஆனால், சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள மாடல் அழகி நிகிதா ஷர்மா லேட்டஸ்ட்டாக பதிவிட்டுள்ள போஸ்ட்டை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

நிகிதாவுக்கு என்ன ஆச்சு?: நடிகை சமந்தாவுக்கு மயோசைடிஸ் பாதிப்பு ஏற்பட்டது ரசிகர்களை பெருமளவில் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகை ரகுல் ப்ரீத் சிங் 80 கிலோ எடையை தூக்கி அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். இந்நிலையில், நிகிதா ஷர்மா வெறும் சட்டையை மட்டும் அணிந்துக் கொண்டு தனது பின் புறத்தில் இருந்து தொடை மற்றும் கால் முழுக்க ஊசி குத்தும் வீடியோவை காட்டி அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்.

இத்தனை ஊசியா?: சப்ஸ்டன்ஸ் படத்தில் டெமி மூர் போடும் அந்த ஒரு ஊசியே ரசிகர்களை பீதியடைய செய்தது. இந்நிலையில், பின்புறத்தில் இருந்து ஒரு கால் முழுவதும் ஊசி குத்தி தனக்கு ஏற்பட்டுள்ள lower back injuryயை சரி செய்ய ட்ரீட்மெண்ட் எடுத்து வருவதாகவும் வலி உயிர் போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வலியை கடந்து வருவேன்: ஊசி குத்தும் போது வலி உயிர் போகிறது என்று குறிப்பிட்டுள்ள நிகிதா ஷர்மா சீக்கிரமே இந்த வலியையும் வேதனையையும் கடந்து வருவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அவரது லட்சக் கணக்கான ரசிகர்கள் நிகிதா ஷர்மா சீக்கிரமே குணமாகி வரவேண்டும் என்றும் ஒரு ஊசி குத்தவே பயப்படுவேன். நீங்க எப்படி இத்தனை ஊசிகளை அசால்ட்டாக போட்டுக்குறீங்க என்றெல்லாம் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. உங்களை டூ பீஸ் உடையில் பார்க்கவே ஆசைப்படுகிறோம். நீங்க இப்படி கஷ்டப்படுறதை எல்லாம் காட்டாதீங்க, தாங்கவே முடியவில்லை என்றும் ரசிகர்கள் வேதனை பதிவுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X