»   »  கேரளத்தில் செட்டிலாகும் நிகிதா

கேரளத்தில் செட்டிலாகும் நிகிதா

Subscribe to Oneindia Tamil
தமிழில் தனது கையை சுட்டுக் கொண்ட நிகிதா மலையாளத்தில் இப்போது மார்க்கெட்பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

கன்னட மண் கொடுத்த கன் பார்ட்டிதான் நிகிதா. முதலில் மலையாளத்தில் நடிக்கஆரம்பித்த அம்மணி பின்னர் தமிழுக்கு வந்தார். இங்கு அவரது முதல் படம்போணியாகவில்லை.

இதனால் தெலுங்குக்கு ஓடினார். ஆனால் கிளாமர் காரம் தாங்க முடியாமல் பேக் டூபெவிலியனாக மீண்டும் மலையாளத்துக்கே தாவினார்.

தமிழில் ஏகப்பட்ட மலையாள நடிகைகள் குவிந்து கிடப்பது நிகிதாவுக்கு பெரும்இடையூறாகப் போய் விட்டது. மேலும் இங்கே கிளாமர் காட்டினால்தான் ஆச்சு என்றுநிலை வேறு.

ஆனால் எனக்கு ஓவர் கிளாமர் பிடிக்காது என்று கூறிக் கொண்டு தெலுங்குக்குப்போனார். அங்கோ இடை எடுப்பும், உடைக் குறைப்பும் கட்டாயமானதால் நிகிதாவும்கிளாமர் கிணற்றில் குதித்தார்.

அப்படியே சில காலம் ஓட்டியவருக்கு அங்கேயும் சரிவு. இதையடுத்துமலையாளத்துக்கேத் திரும்பியுள்ளார்.

அங்கு நிகிதாவுக்கு மீண்டும் வரவேற்பு கிடைத்துள்ளது. மம்முட்டியின் பஸ்கண்டக்டர் படத்தில் நடித்தார். ஆனால், அது பெரிய பிரேக் கொடுக்கவில்லை.

இருந்தாலும் மீண்டும் மம்மூவின் உதவியுடன் அவருடனே மீண்டும் ஒரு படத்தில்ஜோடி போடுகிறார். பார்கவ சரிதம் மூணாம் காண்டம் என்பது படத்தின் பெயர்.இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நங்கூரமிட்டு உட்கார்ந்து விடத்திட்டமிட்டிருக்கிறாராம் நிகிதா.

எங்கேயோ பொழச்சா சரி..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil