மின்மினி பூச்சி போல மின்னொளி வெளிச்சத்தில் மின்னும் நிக்கி கல்ராணி!

சென்னை: ஜி வி பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான டார்லிங் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை நிக்கி கல்ராணி

யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் என இரண்டு படங்களில் ஆதியுடன் ஜோடி போட்டு நடித்த நிக்கி கல்ராணி இப்போது சிவுடு என்ற படத்தில் மீண்டும் ஆதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்

தமிழ்,மலையாளம்,கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி இப்பொழுது மின்மினி பூச்சி போல மின்னொளி வெளிச்சத்தில் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

காமெடி கலந்த ஹாரர் ஜானரில்

காமெடி கலந்த ஹாரர் ஜானரில்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ்குமார் இப்போது ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கிக் கொண்டுள்ளார். அந்த வகையில் சாம் ஆண்டன் இயக்கத்தில் டார்லிங் என்ற படத்தில் அறிமுகமானார். அதே படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மிகவும் வித்தியாசமான காமெடி கலந்த ஹாரர் ஜானரில் வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றது.

ஹர ஹர மகாதேவகி

ஹர ஹர மகாதேவகி

யாகாவராயினும் நாகாக்க, கோ 2, கலகலப்பு 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம் , ராஜவம்சம் என நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் சர்ச்சை இயக்குனர் என்ற பெயர் பெற்ற சந்தோஷ் குமார் இயக்கத்தில் வெளியான ஹர ஹர மகாதேவகி படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்து இருப்பார். அடல்ட் ஜானரில் வெளியான இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது.

மூன்றாவது முறையாக ஆதிக்கு ஜோடியாக

மூன்றாவது முறையாக ஆதிக்கு ஜோடியாக

யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் என இரண்டு படங்களில் ஆதியுடன் இணைந்து நடித்த நிக்கி கல்ராணி இப்பொழுது மூன்றாவது முறையாக ஆதிக்கு ஜோடியாக சிவுடு என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும் இந்தப் படம் ஆக்ஷன் கதை களத்தில் உருவாகிறது. இயக்குனர் சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.

மின்னொளி வெளிச்சத்தில் ஜொலிக்கும்

மின்னொளி வெளிச்சத்தில் ஜொலிக்கும்

தில்லுக்கு துட்டு முதல் இரண்டு பாகங்களை தொடர்ந்து இயக்குனர் ராம் பாலா இப்பொழுது இடியட் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஒவ்வொரு படங்களிலும் பேயைப் பங்கமாக கலாய்த்து வரும் ராம்பாலா இடியட் படத்திலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி இதில் லீட் ரோலில் நடித்து உள்ளனர். இப்படம் மிக விரைவிலேயே நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி மின்மினிப் பூச்சி போல மின்னொளி வெளிச்சத்தில் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X