Don't Miss!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஆதி என் ஆசைக்கு தடைபோட மாட்டார்.. நிக்கி கல்ராணியின் சுவாரஸ்ய பதில்!
சென்னை : ஆதி என்னை மிகவும் நேசிக்கிறார், என்னுடைய ஆசைக்கு அவர் தடைபோட மாட்டார் என்று நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.
நடிகை நிக்கி கல்ராணி 2014 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார்.
தமிழில் இடியட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
கிருஷ்ணா
குரூப்
செய்த
சாதனை...ஆதியின்
வருங்கால
மனைவி
நிக்கி
கல்ராணி
பாராட்டு

நிக்கி கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணி, யாகாவராயினும் நா காக்க, கோ2, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம், ஹர ஹர மகாதேவகி, ராஜவம்சம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

காதல் கிசுகிசு
யாகாவராயினும் நாகாக்க படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்த போதே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், காதல் விவகாரம் குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர். இந்த ஜோடிக்கு திடீரென நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

என் ஆசைக்கு தடை போடமாட்டார்
இந்நிலையில், நிக்கி கல்ராணி அளித்துள்ள பேட்டியில், ஆதி என்னை மிகவும் நேசிக்கிறார், திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை, அந்த ஆசைக்கு ஆதி நிச்சயம் தடை போடமாட்டார், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் நிக்கி கல்ராணி கூறினார்.

கிளாப்
நிக்கி கல்ராணி, இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவுடு திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. மேலும், ஆதி தெலுங்கில் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் 'கிளாப்' மற்றும் 'தி வாரியர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகே இவர்களின் திருமணம் தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.