நிக்கி கல்ராணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்… மாப்பிள்ளை யார் தெரியுமா ?

சென்னை : பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு விரைவில் பிரபல நடிகருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை நிக்கி கல்ராணி 2014 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் இடியட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி, யாகவராயினும் நாகாக்க, கோ2, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம், ஹர ஹர மகாதேவகி, ராஜவம்சம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

யாகவராயினும் நாகாக்க படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்த போதே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், காதல் விவகாரம் குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர். தற்போது, ஆதியின் குடும்ப விழா ஒன்றில் நிக்கி கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து, இருவரின் காதல் விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ரகசியமாக நிச்சயதார்த்தம்

ரகசியமாக நிச்சயதார்த்தம்

இந்த காதல் ஜோடி ரகசியமாக நிச்சயதார்த்த விழாவை நடத்த உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே முழு வீச்சில் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமண தேதியை முடிவு செய்துவிட்டு, திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

கிளாப்

கிளாப்

தற்போது நிக்கி கல்ராணி, இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவுடு திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. ஆதி தெலுங்கில் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் 'கிளாப்' மற்றும் 'தி வாரியர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகே இவர்களின் திருமண தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X