வேண்டும் என்றே ஜிப் போடாமல், பிரபல நடிகையின் போட்டோஷூட்.. கன்னாபின்னா விளாசலில் கறார் ரசிகர்கள்!
சென்னை: 'காஞ்சனா 3' நடிகையின் புதிய போட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி நடித்த படம், காஞ்சனா 3.
இதில், இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தவர் நிக்கி தம்போலி. இந்தப் படத்துக்குப் பின் தெலுங்கு சில படங்களில் நடித்தார்.

தென்னிந்திய சினிமா
மும்பை இறக்குமதி நடிகையான இவர், கன்னடத்திலும் நடித்துவருகிறார். இப்போது இந்தியில் அறிமுகமாகிறார். ராஜேஷ் பஜாஜ் இயக்கும் இந்தி படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர், நமஷி சக்கரவர்த்தி. இவர், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன்.

வொர்க் ஷாப்
இதுபற்றி நிக்கி தம்போலி, இது ஜாலியான பொழுதுபோக்கு படம். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியராக நடிக்கிறேன். காதல், காமெடி, ஆக்ஷன் எல்லாமே படத்தில் இருக்கிறது. எனது பாடிலாங்குவேஜ், பேச்சு வழக்கு உள்ளிட்ட ஸ்டைல்களுக்காக வொர்க் ஷாப் நடக்க இருக்கிறது. அதில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

வெளியில் வராமல்
அதற்குள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு விட்டதால் வொர்க்ஷாப் தள்ளிப் போயிருக்கிறது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்து வருகிறார் நிக்கி தம்போலி. இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் பதிவிட்டுள்ள த்ரோக்பேக் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பேன்ட் பட்டன்
சன்பாத் போட்டோ என்று குறிப்பிட்டிருக்கிற அந்த புகைப்படத்தில், பேன்ட் பட்டனை போடாமல் இருக்கிறார். கிளாமரான இந்த போட்டோவுக்கு பலர் பலவிதமான கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர், 'எல்லாம் சரி, வேணுன்னேதானே ஜிப் போடாம இருக்கிறீங்க?' என்று கேட்டுள்ளார். இன்னும் சிலர் முதல்ல, அதை போடுங்கம்மா என்று கூறியுள்ளனர்.

தேவையில்லை
நீங்க இயற்கையாகவே அழகு, மேக்கப் உங்களுக்கு தேவையில்லை என்று சிலரும் உங்க பாலிவுட் என்ட்ரியை எதிர்பார்க்கிறோம் என்று சிலர் நெட்டிசன்களும் கூறியுள்ளனர். காஞ்சனா 3 படத்துல உங்களை பார்த்திருக்கேன். கவலைப்படாதீங்க, நீங்க வேற லெவலுக்கு போயிடுவீங்க என்று ஒரு ரசிகர் கூறியிருக்கிறார். ஏன் பழைய போட்டோ? ஸ்டாக் தீர்ந்துடுச்சா என்று ஒருவர் கேட்டுள்ளார்.
Recommended Video

எடுத்துக்காட்டு
சில ரசிகர்கள் ஒரே ஒரு பதில் போடுங்களேன் என்று கெஞ்சியுள்ளனர். சிலர் அவரை கண்டபடி வர்ணித்துள்ளனர். ஒருவர், நீங்க மட்டும் எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க என்றும் அழகுக்கு எடுத்துக்காட்டு வேணும்னா, உங்களை காண்பிக்கலாம் என்று சிலரும் நீங்கள் தேவதை போல இருக்கீங்க என்று சிலரும் வழிந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











