»   »  பரத் ஜோடியாக நிலா

பரத் ஜோடியாக நிலா

Subscribe to Oneindia Tamil

லீ படத்தை முடித்து விட்ட நிலா அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். பரத்துடன்கில்லாடி என்ற படத்தில் ஜோடி சேருகிறார்.

ஜாம்பவான் தகராறுக்குப் பிறகு நிலாவை தயாரிப்பாளர்கள் அதிகம் விரும்பவில்லை.காரணம் அவரைப் போட்டு படம் எடுத்து வலியக்கப் போய் வம்புகளை விலைக்குவாங்க அவர்கள் விரும்பாததே முக்கிய காரணம்.

இதனால் நிலாவைத் தேடி அதிக அளவில் படங்கள் வரவில்லை. தமிழ்இல்லாவிட்டால் தெலுங்கு என நிலாவும் தெனாவட்டாகத்தான் இருந்தார். ஆனால்அவர் நடித்த தெலுங்குப் படத்திலும், தயாரிப்பாளருடன் பிரச்சினையாகி விட்டது.

சம்பளப் பாக்கியைத் தரக் கோரி கேஸ் போட்டுள்ளார் நிலா. இதனால் தெலுங்குப்படத் தயாரிப்பாளர்களிடையே நிலா மீது கடுப்பு கிளம்பியுள்ளது. இதனால் அரண்டுபோன நிலா இப்போது தமிழ் பக்கம் மீண்டும் தனது பாசப் பார்வையைதிருப்பியுள்ளார்.

முன்பு போல பஞ்சாயத்து வராது, நம்பி படத்தில் நடிக்க வைக்கலாம், சம்பளத்திலும்கறார் செய்ய மாட்டேன், கிளாமராக நடிக்கவும் கிராக்கி பண்ண மாட்டேன் என நிலாதரப்பில் ஓலை போயுள்ளதாம். இதனால் மகிழ்ந்து போன சில தயாரிப்பாளர்கள்நிலாவைப் போட்டு படம் எடுக்க ஆர்வமாக உள்ளனராம்.

இப்போது பரத்துடன் ஜோடி சேர்ந்து கில்லாடி என்ற படத்தில் நடிக்க புக் ஆகியுள்ளார்நிலா. கஜினி படத்தைத் தயாரித்த சேலம் சந்திரசேகர்தான் இந்தப் படத்தைத்தயாரிக்கப் போகிறார். கமர்ஷியல் படங்களை இயக்குவதில் கில்லாடியானஏ.வெங்கடேஷ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

முற்றிலும் இளைஞர்களுக்கான படமாம் இது. எனவே பரத்துக்கு நடனத்திலும்,நிலாவுக்கு ஆட்டம், பாட்டத்திலும் அமர்க்களப்படுத்த நிறைய வாய்ப்பு உள்ளதாம்.

பட்டையைக் கிளப்பும் மியூசிக்கைப் போட ஸ்ரீகாந்த் தேவா தயாராக உள்ளார்.கோபிநாத் கேமராவைக் கையாளவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் புகைப்படசெஷனை பழனி அருகேயும், பொள்ளாச்சி மாட்டுச் சந்தையிலும் வைத்துநடத்தினராம்.

லீ படம் தனக்கு பிரேக் தரும் என்ற நம்பிக்கையில் உள்ள நிலா, கில்லாடி மூலம்கோலிவுட்டில் நிரந்தரமாக உட்கார்ந்து விட வேண்டும் என எண்ணிக்கொண்டுள்ளாராம்.

ஆமாம்மா, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களால் இனியும் உங்கள் பின்னால்ஓடிக் கொண்டிருக்க முடியாது!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil