»   »  கில்லாடி நிலா!

கில்லாடி நிலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமாவாசைக்குப் பிறகு வரும் பவுர்னமி போல, இடையில் ஏற்பட்ட சிறிய தொய்வுக்குப் பின்னர் புது வேகத்தோடு நடிக்க ஆரம்பித்துள்ளார் நிலா.

அ ஆ வந்தபோது, ஆஹா என்று அசர வைத்தவர் நிலா. அப்படியே சிம்ரன் போலவே இருக்காருப்பா என்று ரசிகர்கள் லயித்துப் போய் அவரதுஅழகை நினைத்து ஜொள்ளு விட்டனர்.

ஆனால் சிம்ரனிடம் இருந்த மெச்சூ>ட்டி, திறமை இப்படி எதுமே நிலாவிடம் இல்லை. மாறாக, அசமஞ்சம், அட்டகாசம், அடாவடி என புதுடிராக்கில் பயணிக்க ஆரம்பித்தார் நிலா.

இதனால் ஏகப்பட்ட கெட்ட பெயர்கள். ஜாம்பவான் படத்தின் பாதியில் அவர் ஷூட்டிங்கிலிருந்து ஓடியதால் நிலாவின் பெயரைக் கேட்டாலே,தயாரிப்பாளர்கள் சிக்குன்குனியா வந்தது போல அலற ஆரம்பித்தனர்.

இந்தக் குழப்பம் எல்லாம் நிலா, லீ படத்தில் நடிப்பதற்கு முன்பு வரைதான். லீ படத்திலிருந்து அவரிடம் நிறைய மாற்றங்கள். பெரிய அளவில்பிரச்சினை பண்ணாமல் லீ படத்தில் நடித்த நிலாவைப் பார்த்து தயாரிப்பாளர்கள் மத்தியில் நிம்மதி வந்தது.

இதைத் தொடர்ந்து கில்லாடி, மருதமலை என சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் நிலா. நான் மாறி விட்டேன் என்பதை நிரூபிக்கும் வகையில்கில்லாடி பட ஷூட்டிங்கிலும், மருதமலை ஷூட்டிங்கிலும் படு சமர்த்தாக நடித்துக் கொடுத்து வருகிறாராம்.

தற்போது கில்லாடி படத்துக்காக புதுச்சேரியில் .காமிட்டுள்ள நிலாவை, ஒரு சாயந்திர நேரத்தில் சந்தித்து உசாவினோம். நிஜமாவே நிலாவின்பேச்சிலும், செயலிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணர முடிந்தது.

சொல்லுங்க நிலா, எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. பரத்துடன் கில்லாடி, அர்ஜூனுடன் மருதமலை எனஇரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியிலும் நடிக்கப் போகிறேன்.

முன்னாடி மாதிரி இப்போது சிக்கல் தருவதில்லையாமே?

எப்போதுமே நான் எந்தப் பிரச்சினையும் செய்ததில்லை. இடையில் எழுந்த சில பிரச்சினைகளும் கூட என்னால் வந்ததில்லை. அதெல்லாம் முடிந்தகதை. இப்போதைக்கு என்னால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. அதுதான் முக்கியம்.

சம்பளம் கூட கேட்கிறீர்களாமே?

அப்படியெல்லாம் இல்லை. எனது கதாபாத்திரம், மக்கியத்துவம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துத்தான் நான் சம்பளம் கேட்கிறேன். மற்றபடிஇஷ்டத்திற்குக் கேட்பதில்லை. கூட்டிக் கேட்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை, எல்லாம் புரூடா.

லீ திருப்தி தந்ததா?

நிச்சயம், படம் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன். சந்தோஷமாக இருக்கிறது. ஹிட் படத்தில் நானும் இருகிகறேன் என்பதுபெருமையாக உள்ளது. லீ படத்தில் எனது கேரக்டர் சிறப்பாக இருந்தது. அத்தனை பேருமே நன்றாக நடித்திருந்தோம்.

நிறையப் படங்களில் நடிக்காதது ஏன்?

நல்ல கேரக்டர் கிடைக்காததால் சில படங்களை நானே ரிஜெக்ட் செய்து விட்டேன். நிறையப் படங்களில் நடிக்கிறோம் என்ற பெயருக்காக நான்நடிக்க விரும்பவில்லை. நல்ல படங்களாக இருக்க வேண்டும், நம்ம கேரக்டர் பேசப்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

தொடர்ந்து நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன். ஓவராக கிளாமர் காட்டினால் நிறையப் படங்களில் நடிக்க முடியும். ஆனால் அதில் எனக்குஇஷ்டம் இல்லை. அளவான கிளாமர், நல்ல வேடம் இதுதான் எனக்குத் தேவை.

என்னைத் தேடி நல்ல கேரக்டர்கள் வருவதற்காக காத்திருக்கிறேன். அதில் தவறில்லை.

லீ படத்தை ரசிகர்களோடு சேர்ந்து சென்னை தியேட்டரில் பார்த்து ரசித்தாராம் நிலா. ரசிகர்களில் பலரும் திரையில் வந்த நிலாவைப் பார்ப்பதற்குப்பதில் தியேட்டருக்கு வந்த நிலாவைத்தான் ரொம்பவே ரசித்தார்களாம்.

எங்க இருந்தாலும் நிலா அழகுதானே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil