»   »  நிலாவின் கிளாமர் உலா!

நிலாவின் கிளாமர் உலா!

Subscribe to Oneindia Tamil

கேரக்டருக்கேற்ப கிளாமர் காட்டி நடிக்க நான் ரெடிதான் என்று சந்தோஷமாக கூறுகிறார் நிலா.

அன்பே ஆருயிரே படத்துக்குப் பிறகு நிலா சுணங்கிப் போனார், சுருங்கிப் போனார். சிம்ரனின் வாரிசு என்று பட்டை தீட்டப்பட்ட நிலா, கடைசியில் புஸ்வானமாகிப் போனார்.

அப்படியும் இப்படியுமாக அவருக்கு இப்போது வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன. இடையில் செய்த குளறுபடிகள், பந்தாக்கள், பாவ்லாக்களை தூக்கித் தூரப் போட்டு விட்டார் நிலா. இதனால் சமர்த்துப் பொண்ணு என்ற பெயர் கிடைத்து வருகிறதாம்.

அர்ஜூனுடன் மருதமலை, பரத்துடன் கில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் நிலா, திணிக்கப்படாத கிளாமருக்கு தான் எப்போதும் பச்சைக் கொட்டி காட்டுவதாக கூறுகிறார்.

மருதமலையில் அழகான கிளாமரில் அசத்தலாக நடித்திருப்பதாக கூறும் நிலா, கூடவே காமெடியிலும் கலக்கியிருக்கிராராம். இவரும் வடிவேலுவும் வரும் காமெடிக் காட்சிகள் வயிறுகளை உலுக்குமாம்.

ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காவிட்டால் குத்துப் பாட்டுக்கு குதிப்பீர்களா என்று கேட்டால், காளை படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதை வைத்துத்தானே இப்படிக் கேட்கிறீர்கள் என்று நம்மைப் பார்த்து திருப்பிக் கேட்ட நிலா, சிம்பு எனது பிரண்ட். அதனால்தான் ஆடுகிறேன்.

மற்றபடி குத்துப் பாட்டுக்கு ஆடுவது எனக்கு இலக்கில்லை. அப்படி ஆடுவதால் தவறில்லை. நயனதாரா கூட சிவாஜி படத்திலும், சிவகாசி படத்திலும் ஆடியிருக்கிறாரே என்கிறார்.

அதேசமயம், தனுஷ் படத்தில் (யாரடி நீ மோகினி படத்தில்) ஆடக் கூப்பிட்டார்களாம். முடியாதுன்னுட்டாராம் நிலா.

நிலாவுக்கு எந்த நடிகருடனும் நடிக்க இஷ்டம்தானாம். மூத்த நடிகர், சின்ன நடிகர் என்றெல்லாம் பார்க்க மாட்டாராம். எல்லோருமே திறமையானவர்கள்தான். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்கிறார் படு பிராக்டிகலாக.

கலகலன்னு நல்லா பேசக் கத்துக்கிட்டாருப்பா, நிலா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil