»   »  நிலா நிலா ஓடி வா!

நிலா நிலா ஓடி வா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிலா கொஞ்சம் அடக்கமாகியுள்ளார். எல்லாம் கையிருப்பு குறைந்த போனகாரணத்தால்தான் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

நடித்து வெளியானது அ.. ஆ என்ற ஒத்தப் படம் தான். ஆனால்அதற்குள் நிலா செய்தஅலும்புகள் தமிழ் சினிமா என்ற சூரிய குடும்பத்தையே ஆட்டிவிட்டது ஆட்டி.

ஜாம்பவான் படப்பிடிப்பின்போது குளிக்கவும் மினரல் வாட்டர் கேட்டு, கிடைக்காதகோபத்தில், தயாரிப்பாளர் மீது செக்ஸ் புகாரை தூக்கி வீசிவிட்டு, குற்றாலத்திலிருந்துஓடிப் போனவர்தான் நிலா.

அதன் பிறகு சமரசப்படுத்திகூட்டி வந்து மிச்சக் காட்சிகளை சுட்டுமுடித்தார்கள்.இப்போது நிலா கையில் அதிக அளவில் படங்கள் ஏதும் இல்லை. தனது மகன்சிபியை ஹீரோவாகப் போட்டு சத்யராஜ் சொந்தமாகத் தயாரிக்கப் போகும் லீ என்றபடத்தில் மட்டும் தான் நிலா நடிக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அப்போதுமேடைக்கு வந்த நிலாவைப் பார்க்க வேண்டுமே, படு அடக்கமாக வந்திருந்தார்(உடையில் அல்ல!).

நிலாவைப் பார்த்து சத்யராஜ், நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா என்று பாப்பாபாட்டு பாடி அசத்தியபோது, நிலவின் முகம் மேலும் சிவந்து போனது.

முன்பு போல நிலா இப்போது ஓவர் லொள்ளுகள் எல்லாம் செய்வதில்லையாம்.அவரே சில பி.ஆர்.ஓ.க்களைத் தொடர்பு கொண்டு நல்ல வாய்ப்பு வந்தால்சொல்லுங்கள் என்று போனில் கொஞ்சுகிறார்.

தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இளம் நடிகர்கள் என பொட்டன்சியலானபலருக்கும் போன் போட்டு வாய்ப்பு கேட்கிறார்.

புதிய பட வாய்ப்புகளுக்காக கெடுபிடியான கண்டிஷன்களையும் குறைத்துக்கொண்டுவிட்ட நிலா, சம்பளத்தை மட்டும் அப்படியே குறைக்காமல் வைத்துள்ளார்.

கிளாமர் தூக்கலா தர்றேன், சிக்கல் தர மாட்டேன் என்று நிலா கொக்கி போடுவதால்சில சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் கூட நிலாவை புக் செய்யலாமா என்று சபலம்தட்டியபடி யோசனையில் ஆழ்ந்துள்ளனராம்.

பாத்துங்க.. பெளர்ணமின்னு ஒன்னு வந்தா, அமாவாசையும் வரத்தானே செய்யும்!

Read more about: nila in satyarajs production

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil