»   »  பம்மாத்து நிலா

பம்மாத்து நிலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிலா பண்ணும் பம்மாத்துக்களுக்கு முடிவே கிடையாது போலும். தொடர்ந்து ரப்ச்சர் செய்து வருகிறாராம். சொல்லிஅழுகிறார்கள் லீ படக் குழுவினர்.

நடித்து வெளியாகியுள்ளது இரண்டே ரெண்டு படம்தான். முதல் படம் அன்பே ஆருயிரே, எஸ்.ஜே.சூர்யாபரபரப்பை வைத்து ஏதோ ஓடி விட்டது. இரண்டாவது படம் ஜாம்பவான்.

இப்படத்தின் ஷூட்டிங் குற்றாலத்தில் நடந்தபோது குளிக்க மினரல் வாட்டர் தரவில்லை என்று கூறி ஷூட்டிங்ஸ்பாட்டை விட்டு ஓடி விட்டார் நிலா. பிறகு பிரஷாந்த்தின் அப்பா தியாகராஜனும், தயாரிப்பாளரும்,இயக்குநரும் டெல்லிக்கு காவடி எடுத்துப் போய் நிலா காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடி கூட்டிவந்தனர்.

அத்தோடு முடிந்தது நிலாவின் அலும்பு என எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போதுநடித்துக் கொண்டிருக்கும் லீ படத்திலும் ஏகப்பட்ட லொள்ளு பண்ணி வருகிறாராம் நிலா.

சத்யராஜ் சொந்தக் காசை போட்டு எடுக்கும் படம் தான் லீ. இதில் சிபிராஜ்தான் ஹீரோ. கொக்கி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய பிரபு சாலமன் தான் லீயையும் இயக்குகிறார்.

படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையின் பிரபலமான தாதா ஏரியாவான அயோத்தி குப்பத்தில் நடந்துவருகிறது. வீரமணியால் புகழ் பெற்றது அயோத்தி குப்பம். என் கவுண்டரில் வீரமணி மறைந்த பிறகு, இப்போதுஅயோத்தி குப்பம், வீரமணியின் மனைவி கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று லீ படக் குழுவினர் கேட்டபோது உடனடியாக சம்மதம் தெரிவித்தவீரமணியின் மனைவி, படக்குழுவினருக்கு தானே முன்னின்று பாதுகாப்பையும், சகல உதவிகளையும் செய்துவருகிறாராம்.

கழிவு நீர்க் குட்டைகள், கும்மாளமடிக்கும் கொசுக்கள் என நராசமான சூழ்நிலையை சகித்துக் கொண்டுபடப்பிடிப்பை நடத்தி வருகிறார் சாலமன். அவருக்கும், படக் குழுவினருக்கும் ஸ்பாட்டில் பயங்கரமரியாதையாம். அனைவரும் நன்கு ஒத்துழைக்கிறார்களாம். இதனால் அவர்களில் சிலரையும் தனது படத்தில்நடிக்க வைத்துள்ளாராம் சாலமன்.

இப்படி ஒரு தாதா ஏரியாவே லீ படத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்க நாயகி நிலாவின் பஞ்சாயத்துத்தான்பெரிய ரோதனையாக இருக்கிறதாம். சென்னை வெயில் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். அதனால் லீபடத்தின் ஷூட்டிங்கை வேறு எங்காவது வையுங்களேன் என்று ஆரம்பத்திலேயே கூறினாராம்.

சரி ஹீரோயின் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வோம் என்பதற்காக கர்நாடகத்தின் குளுகுளு பகுதிகள்சிலவற்றில் படப்பை நடத்தியுள்ளனர். அங்கே போன பின்னர் அய்யோ, இவ்வளவு கூலாக இருக்கிறதே, எனக்குகுளிர் ஒத்துக் கொள்ளாது என்று கூறியுள்ளார்.

இப்போது அயோத்திகுப்பத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்தக் காட்சியை இங்கே விட்டால் எங்குமே படமாக்கமுடியாது என்பது சாலமனின் எண்ணம்.

ஆனல் இங்கெல்லாம் வந்து என்னால் நடிக்க முடியாது என்று முகம் சுளித்திருக்கிறார் நிலா. இதனால்கடுப்பாகியுள்ளார்களாம் லீ குழுவினர். நிலா இப்படியே செய்து கொண்டிருந்தால் சுட்டெரிக்கும் சூரியனாக மாறிநிலாவை டுமீல் செய்து விட்டு வேறு நாயகியை போட்டு விடுவார்கள் போலத் தெரிகிறது.

நிலான்னா குளுமை, ஆனால் இந்த நிலா மட்டும் எப்பவும் சூடாகவே இருக்கிறாரே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil