»   »  சிபியுடன் சேரும் நிலா!

சிபியுடன் சேரும் நிலா!

Subscribe to Oneindia Tamil

ஜாம்பவான் படத்தைத் தவிர வேறு ஒன்னும் கையில், இல்லாமல் கிடந்த நிலாவுக்குபுதிய படவாய்ப்பு வந்துள்ளது.

நட்சத்திர வாரிசுகள் எல்லாம் ரவுண்டுகட்டி கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில்என்றும் 16 சத்யராஜின் புதல்வன் சிபி மட்டும் தான் இன்னும் செட்டிலாகாமல்இருக்கிறார். அவ்வப்போது அவர் நடித்து ஓரிரு படங்கள் வெளியாகின்றன.

இருந்தாலும் சரியான பிரேக் இல்லாமல் பிசிறடித்துக் கிடக்கிறது சிபியின் கோலிவுட்கேரியர். இப்படத்தை சத்யராஜே தயாரிக்கிறார். சிபிதான் நாயகன், கொக்கி படஇயக்குநர் பிரபுசாலமன் தான் இப்படத்தை இயக்கப்போகிறார். இப்படத்திற்காக சிபிக்கு நாயகியைப் பிடிப்பதற்குள்படாத பாடு பட்டு விட்டார்களாம்.

சிலமுன்னணி நடிகைகளைஅணுகியுள்ளனர். ஆனால் யாரும் சிபியுடன் ஜோடி சேரமுன்வரவில்லையாம். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று மண்டையைப்பிய்துத்துக் கொண்ட பிரபுசாலமன், சரி நிலாவைப் பிடிப்போம் என அவரைஅணுகியுள்ளார்.

ஜாம்பவான் படத்தின் போது செய்த பஞ்சாயத்தால், ஒரு தயாரிப்பாளரும் நிலாவைப்போட முன்வராததால், படம் இல்லாமல், வறண்டு போன பாலாறு கணக்காகஇருந்தார் நிலா. அவருக்கு பிரபு சாலமன் பட வாய்ப்பு கரை புரண்டோடியகாவிரியைப் பார்த்தது போல சந்தோஷத்தைத் தந்ததாம். இதனால் உடனடியாக ஓ.கே. சொல்லி விட்டாராம்.

படத்தின் கதை சத்யராஜை மிகவும் கவர்ந்துள்ளதாம். இந்தப் படம் சிபியை தூக்கிநிறுத்தும் என்று ரொம்பவே நம்பிக்கையாக உள்ளாராம். அப்படியே நிலாவையும்தூக்கி விடட்டும்.சிபிதான் இப்படி ஃப்ரீயாக உள்ளார்.

ஆனால் அப்பா சத்யராஜோ, பெரியார், ரீல் நம்பர் 15, குருஷேத்திரம் என படுபிசியாகத்தான் உள்ளார்.கொஞ்ச நாளைக்கு முன்புதான் தமிழையும், தமிழ் ரசிகர்களையும் திட்டித் தீர்த்தார்நிலா.

இப்போது புரட்சித்தமிழ் சொந்தமாக தயாரிக்கப் போகும் படத்தில் நிலாவைநாயகியாக்கியுள்ளனர்.

வாழ்க தமிழ் சினிமா!

Read more about: nila to pair with sibi raj
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil