»   »  சூரியனுக்கு ஸாரி சொன்ன நிலா!

சூரியனுக்கு ஸாரி சொன்ன நிலா!

Subscribe to Oneindia Tamil

அறிமுகப்படுத்தி தமிழில் ஒரு ஆஃபர் கொடுத்த குருநாத் எஸ்.ஜே.சூர்யாவுக்கேஸாரி சொல்லி அவருக்கு ஆப்படித்து விட்டாராம் நிலா.

நிலா நிலா ஓடி வா என்று சண்டிகரிலிருந்து கோடம்பாக்கத்துக்கு மீரா சோப்ராவைகூட்டி வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. முதல் படமான அன்பே ஆருயிரேவில், நிலாவைநல்லா நடிக்க வைத்தார்.

சின்ன சிம்ரன் என்று நிலாவை சூர்யா வர்ணித்தாலும், சிம்ரனின் இடுப்பு வெட்டுக்குக்கூட இணையாகாத அளவுக்குத்தான் நிலா இருந்தார். முதல் படம் எப்படியோ ஓடிவிட்டது. வெண்ணை போல நிலாவுக்கு தங்க மனசு இருக்கும் என நினைத்துநிறையப் பேர் அண்டினார்கள். ஆனால் போனவர்கள் எல்லாம் விளக்கெண்ணைகுடித்தவர்கள் போல பெருங்குழப்பத்தில் சிக்கிப் போனார்கள்.

ஜாம்பவான் என்ற படத்தில் நிலாவை நடிக்க வைத்து படத்தை எடுத்து முடிப்பதற்குள்மண்டை காய்ந்து போய் விட்டது யூனிட்டுக்கு. அப்புறம் இப்போது லீ படத்திலும்நிலாவால் ஏகப்பட்ட லொள்ளாய்களாம். இத்தனைக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்லொள்ளு ராஜா சத்யராஜ். அவருக்கே கடுக்காய் கொடுக்கிறாராம் நிலா.

இப்படி படு சூடாக இருக்கும் நிலாவை, சமீபத்தில், குரு நாத் சூர்யா அணுகியுள்ளார்.ரொம்ப நாளைக்குப் பிறகு பார்த்த சந்தோஷத்தில், நிலாவுடன் கூடிப் பேசிய சூர்யா,மேட்டருக்கு வந்துள்ளார்.

திருமகன் படத்தில் ஒரு சூப்பர் ரோல் உள்ளது. நீதான் நடிக்கனும், சரியா என்றுஉரிமையோடு குரல் கொடுத்துள்ளார் சூர்யா. எப்ப வரணும் என்பதுதான் நிலாவின்பதிலாக இருக்கும் என நினைத்தார் சூர்யா.

ஆனால் எடுத்த எடுப்பிலேயே பெரிய ஆக்கராக வைத்துள்ளார் நிலா. ஸாரி சாரே,நோ கால்ஷீட். ஃபுல்லாக இருக்கிறது கால்ஷீட் என்று நீட்டி முழக்கி சூர்யாவைகடுப்பாக்கியுள்ளார். இருந்தாலும் தனது கான்க்ரீட் முகத்தை வழக்கம் போலஇறுக்கமாக வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு சிரித்த சூர்யா, அப்படியா,பரவாயில்லை, பரவாயில்லை என்று சமாளித்து விட்டு விடுபட்டாராம்.

ஆனாலும், நமக்கே ஆப்பா என்ற கோபம் கொண்ட சூர்யா இப்போது ஒருமுக்கியமான வேலையில் ஈடுபட்டுள்ளாராம். நிலா நடித்து வரும் படங்களின்தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் போனிலோ அல்லது போணி பண்ணும்நேரத்திலோ பிடித்துப் பேசி நிலாவைப் பற்றிப் போட்டுக் கொடுக்கிறாராம்.

அண்ணே, எனக்கே இப்படின்னா, உங்களையெல்லாம் என்னா பாடு படுத்தி விடும்,பார்த்துக்கங்கண்ணே என்று லேசு பாசாக ஊதி விட்டு வருகிறாராம். கோலிவுட்டின்லேட்டஸ்ட் கிசுகிசு இதுதான்.

கூப்பிடுகிற போதெல்லாம் ஓடி வர இந்த நிலா என்ன அந்த நிலாவா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil