»   »  நிலவு 'ஏங்கும்' நேரம்!

நிலவு 'ஏங்கும்' நேரம்!

Subscribe to Oneindia Tamil
Nila
ஆர்யா மீது வளர் பிறையாக இருந்து வந்த நிலாவின் காதல் முற்றி பெளர்னமியாகியுள்ளதாம். எந்த நேரமும் ஆர்யாவின் நினைவாகவே இருக்கிறாராம் நிலா.

சிம்ரனின் டூப்ளிகேட் போல இருந்ததால், சிம்ரன் இடத்தை நிலா பிடிப்பார் என அவர் முதன் முதலில் நடித்து வெளியான அன்பே ஆருயிரேவுக்குப் பிறகு பெரிதாக பேசப்பட்டது. ஆனால் வெடிக்கத் தவறிய சர வெடியாக மாறிப் போனார் நிலா.

சிம்ரன் இடத்தையும் பிடிக்கவில்லை, தனக்கென ஒரு இடத்தையும் வகுக்கத் தவறி, கோலிவுட்டில் ஜொலிக்கத் தவறினார் நிலா. இடையில் படப்பிடிப்பில் தகராறு, கால்ஷீட் சொதப்பல் என ஏகப்பட்ட குழப்பங்கள் வேறு.

இந்த நிலையில் சமீபத்தில் வந்த மருதமலைக்குப் பிறகு ஓரளவு அவரை நோக்கியும் ஓரிரு படங்கள் வரத் தொடங்கியுள்ளதாம்.

இடையில் தான் ஒருவரை நீண்ட காலமாக காதலிப்பதாக ஒத்துக் கொண்டார் நிலா. அவரும் நானும் டீப்பாக காதலிக்கிறோம், காலம் வரும்போது கல்யாணமும் செய்து கொள்வோம் என்றும் தடாலடியாக கூறியிருந்தார் நிலா.

ஆனால் அந்தக் காதலருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, இப்போது ஆர்யாவை படு தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறார் நிலா. ஆரம்பத்தில் லேசு பாசாக ஆரம்பித்த இவர்களின் காதல் இப்போது அதி தீவிர நிலைக்கு மாறி விட்டதாம்.

இருவரும் சென்னையில் இருந்தால் சேர்ந்தாற் போலத்தான் இருக்கிறார்களாம். ஆர்யா இல்லாமல் நிலாவால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதாம். ஒன்று நேரில் பார்த்து விட வேண்டும் அல்லது போனிலாவது பேசி விட வேண்டுமாம்.

இடையில் நான் கடவுள் ஷூட்டிங்குக்காக தேனிப் பக்கம் ஆர்யா சேர்ந்தார் போல முகாமிட்டபோது நிலா ரொம்பவே ஏங்கிப் போய் விட்டாராம். தினசரி போனில் பேசி சமாளித்த அவர் ஒரு கட்டத்தில் முடியாமல் மதுரைக்கே கிளம்பிப் போய் ஆர்யாவைப் பார்த்து பேசி மனம் லேசானாராம்.

இப்போது அடுத்த கட்டத்திற்குப் போயுள்ளதாம் ஆர்யா, நிலா காதல். ஆர்யா எங்கும் போகக் கூடாது, தன்னுடனேயே இருக்க வேண்டும் என கூற ஆரம்பித்துள்ளாராம் நிலா. நிலாவின் இந்தத் தீவிர காதலைப் பார்த்து கோலிவுட் பயந்து போய் இருக்கிறதாம்.

Read more about: nila

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil