»   »  நிலா... நயனதாரா...

நிலா... நயனதாரா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

நிலா நடித்து இன்னும் ஒரு படமும் வெளியாகவில்லை, அதற்குள் தெலுங்கில் இருந்து அவரைத் தேடிக் கொண்டு வரஆரம்பித்து விட்டார்கள்.

மீரா சோப்ரா என்ற இந்தப் பெண்ணை இன்னொரு சிம்ரனாக்குவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டு கூட்டி வந்திருக்கிறார்எஸ்.ஜே. சூர்யா. பி.எப் என்ற பெயரில் ஆரம்பித்து இப்போது அ.. ஆ.. என்றாகிவிட்ட படத்தில் குறைந்த உடையில் நிறைந்ததரிசனம் தந்து வருகிறது இந்த வெண் நிலா.

தனக்கு சினிமாவில் வாழ்வளித்த சூர்யாவுக்கு ரொம்பவே ஒத்துழைத்துப் போகிறார். அவரைக் கேட்காமல் எந்த முக்கியகாரியத்தையும் நிலா செய்வதில்லை.

அன்றைய சூட்டிங்கில் தனக்கு காட்சிகள் இருக்கிறதோ இல்லையோ ஸ்பாட்டில் ஆஜராகிவிடுகிறார் நிலா. தொழில் மீதுஅவ்ளோ சின்சியாரிட்டியா என்று ஆச்சரியப்பட்டுவிடாதீர்கள்.

சூர்யாவுடன் கடலைஸ் போட்டபடி நேரத்தைக் கழித்துவிட்டு, பேக்-அப் முடிந்தவுடன் முடிந்தால் இருவருமே சேர்ந்தே ஜுட்விடுகின்றனர். இப்படியாக அதிகப்படியான சூர்யாவோடு நேரம் கடத்தியவாரே படத்தில் நடித்து வரும் இந்த நிலாவுக்குஇப்போதே ஏகத்துக்கும் பில்ட்-அப் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் கோலிவுட்டில்.

(மாஜி வளர்ப்பு மகன்) சின்ன எம்ஜிஆர் சுதாகரன் மாதிரி இவருக்கு சின்ன சிம்ரன் என்ற நாமகரணமும் சூட்டிவிட்டுஏகத்துக்கும் கொம்பு சீவி வருகின்றனர்.


இத்தனைக்கும் முதல் படத்தில் இவர் எப்படி நடித்துள்ளார் என்பதே தெரியாத நிலை.

நிலாவுக்கென்று ஒரு எதிர்பார்ப்பு உருவாகிவிட்டதால் அவரை தனது அடுத்த படத்தில் புக் செய்துவிட்டார் இயக்குனர் தரணி.தம், தூள், கில்லி என அதிரடிப் படங்கள் எடுத்த தரணி அடுத்ததாக தெலுங்கில் ஒரு கரம்.. கரம் மசாலா படத்துக்கு தயாராகிவருகிறார்.

அதில் ஹீரோ சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண். அதில் யாரை ஹீரோயினாக்குவது என ஏகப்பட்ட டிஸ்கசனுக்குப் பின்நிலாவைப் பிடிக்கச் சொல்லிவிட்டார்களாம். தரணிக்கும் அந்த ஐடியா ரொம்பவே பிடித்துவிட, (சூர்யா மூலமாக) நிலாவிடம்பேசி தனது படத்துக்கு புக் செய்துவிட்டார்.

அங்கு நிலா என்ற தமிழப் பெயரில் போகாமல், தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ராவாகவே போகிறார்.


ஏற்கனவே பி.எப் ஸ்டில்கள் மூலம் ஆந்திர திரையுலகில் பாப்புலராகிவிட்ட நிலா தெலுங்கில் ஒரு படத்தில் புக் ஆகிவிட்டார்என்றவுடன் அடுத்தடுத்து பெட்டிகளுடன் நிலாவைப் பார்க்க கிளம்பி வர ஆரம்பித்துவிட்டனர் ஆந்திராவாலாக்கள்.

அ..ஆவை முடித்துவிட்டு தெலுங்குப் பக்கம் போகும் நிலா தமிழில் தொடர்ந்து நடிக்கவும் விரும்புகிறாராம்

இப்போது ஒரு பக்கம் நிலா, இன்னொரு பக்கம் கள்வனின் காதலி படத்தில் நயனதாரா என இரு இளமைத் திருவிழாக்களுடன்ரவுண்டி கட்டி கொண்டாட்டம் போட்டு வருகிறார் எஸ்.ஜே. சூர்யா.

கள்வனின் காதலியில் இதுவரை பார்த்திராத நயனதாராவைக் காட்ட போகிறாராம் (உரித்துத் தான்). காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் பாலிஸியை ப்ரிமியம் கட்டி பாலோ செய்து வரும் நயனதாராவும் படத்தில் துணிந்து நடித்து வருகிறார்.


கள்வனின் காதலியைத் தொடர்ந்து திருமகன் என்ற ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாயிருக்கிறார் சூர்யா. இந்தப் படத்தைமுடித்துவிட்டு நடிப்புக்கு தாற்காலிகமாக ஒரு பிரேக் போடும் முடிவில் இருக்கிறாராம் சூர்யா. வேறு யாராவது நடிக்க படத்தின்இயக்கத்தில் மீண்டும் முழு கவனம் செலுத்தப் போகிறாராம்.

அ..ஆ.. படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக நிலாவைத் தூக்கிக் கொண்டு விரைவில் ரஷ்யாவுக்குப் பறக்கப் போகிறார் சூர்யா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil