நிலாவின் ஜாம்பவான் எஸ்.ஜே. சூர்யாவின் நிலா நடிக்க இரண்டாவது தமிழ்ப் படம் விரைவில் தயாரிப்புக்கு வருகிறது.மீரா சோப்ரா என்ற இயற்பெயருடைய நிலாவை தமிழுக்குக் கூட்டி வந்து அன்பே ஆருயிரே மூலம் நிலாவாக மாற்றி தமிழ்ரசிகர்களுக்கு சிம்ரனைப் பார்க்க முடியாத ஏக்கத்தை பாதியளவுக்கு பூர்த்தி செய்தார் எஸ்.ஜே. சூர்யா.முதல் படத்திலேயே தனது கஸ்டடிக்குக் கொண்டு வந்து விட்ட நிலாவை வேறு படங்களில் புக் ஆகாமல் கண்ணும் கருத்துமாகபார்த்துக் கொண்டார் சூர்யா. இருப்பினும் நண்பரான இயக்குனர் தரணியின் வேண்டுகோளுக்கிணங்க பங்காராம் என்றதெலுங்குப் படத்தில் மட்டும் நடிக்க அனுமதி (மனசில்லாமல்தான்) கொடுத்தார் சூர்யா.இப்போது நிலாவை இன்னொரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒரு வழியாக பெர்மிஷன் கொடுத்து விட்டாராம் சூர்யா. அது பிரஷாந்த்மூன்று விதமான வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ள ஜாம்பவான் படம்.விஜயகாந்த்தின் தென்னவன் படத்தை இயக்கிய நந்தகுமார் இயக்கும் இரண்டாவது படம் தான் இந்த ஜாம்பவான். பிரஷாந்த்துக்கு இதில் இரண்டு ஜோடிகள். ஒருவர் நிலா. இன்னொருவர் கவர்ச்சி காந்தமான மேக்னா நாயுடு. இருநாயகிகளுக்குமே இப்படத்தில் கிளாமர்தான் பிரதானம் என்று கூறியே புக் செய்துள்ளார்களாம்.வித்தியாசமான கதைக்களம் என்று கூறப்படும் ஜாம்பவான் படத்தில் இவர்கள் தவிர காமடிக்கு விவேக்கை சேர்த்துள்ளார்கள்.விஜயக்குமார், சத்யன், பெப்சி விஜயன், மதுரை டி.என்.சேஷகோபாலன் ஆகியோரும் மாறுபட்ட பாத்திரங்களில் வரவுள்ளார்கள்.நிலா மேட்டருக்கு வருவோம். இப்படத்தில் நடிக்க நிலா சில நிபந்தனைகள் (யார் சொல்லின்னு உங்களுக்குத் தெரியாதாக்கும்!)போட்டுள்ளாராம். அதை இயக்குனர் நந்தகுமார் தட்டாமல் ஏற்றுக் கொண்டுள்ளாராம். இருப்பினும் கவர்ச்சிக் காட்சிகளுக்குமட்டும் ரொம்ப பிகு செய்யவில்லையாம் நிலா.அதேபோல, மேக்னா நாயுடுவும் இதில் கிளாமரில் புகுந்து விளையாட தலையாட்டிவிட்டாராம்.அவர் நடித்துள்ள முதல் தமிழ்ப் படமான வீராசாமி (டி.ராஜேந்தர் இயக்கி வருகிறார்) ரொம்ப காலமாக தயாரிப்பில் உள்ளநிலையில் இந்தப் படம் தமிழில் தனக்கு நல்ல பிரேக் தரும் என்று நம்புகிறார். பிரஷாந்த்தின் கட்டழகுடன், தனது கிளாமர் கடலும் சங்கமித்தால், நிச்சயம் சுனாமிதான் என்று உறுதியாக நம்பும் மேக்னா,படத்தின் கதையும் தனக்குப் பிடித்ததால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறுகிறார்.இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ள மேக்னா, டி.ராஜேந்தரின் புத்திரனான சிம்புவுடன், சரவணா படத்தில் ஒத்தப் பாட்டுக்குசெம குத்து குத்தியுள்ளார். அப்பாவின் நாயகி என்ற கூச்சம் எதுவுமில்லாமல், மேக்னாவுடன் செம ஆட்டம் போட்டுள்ளாராம்சிம்புவும்.பரத்வாஜ் இசையமைக்க வருகிற 11ம் தேதி சென்னையில் ஜாம்பவான் படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள். அப்படியே மதுரை,தேனி, தென்காசி என படப்பிடிப்பை தொடரவுள்ள படக் குழுவினர் பாடல் காட்சிகளை மட்டும் மொரிஷியஷில் சுட உள்ளனர்.இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் எஸ்.ஜே. சூர்யா இயக்கும் புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம் நிலா.நிலாவை விட மாட்டீங்குறாரே இந்த சூர்யா.

By Staff
எஸ்.ஜே. சூர்யாவின் நிலா நடிக்க இரண்டாவது தமிழ்ப் படம் விரைவில் தயாரிப்புக்கு வருகிறது.

மீரா சோப்ரா என்ற இயற்பெயருடைய நிலாவை தமிழுக்குக் கூட்டி வந்து அன்பே ஆருயிரே மூலம் நிலாவாக மாற்றி தமிழ்ரசிகர்களுக்கு சிம்ரனைப் பார்க்க முடியாத ஏக்கத்தை பாதியளவுக்கு பூர்த்தி செய்தார் எஸ்.ஜே. சூர்யா.

முதல் படத்திலேயே தனது கஸ்டடிக்குக் கொண்டு வந்து விட்ட நிலாவை வேறு படங்களில் புக் ஆகாமல் கண்ணும் கருத்துமாகபார்த்துக் கொண்டார் சூர்யா. இருப்பினும் நண்பரான இயக்குனர் தரணியின் வேண்டுகோளுக்கிணங்க பங்காராம் என்றதெலுங்குப் படத்தில் மட்டும் நடிக்க அனுமதி (மனசில்லாமல்தான்) கொடுத்தார் சூர்யா.

இப்போது நிலாவை இன்னொரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒரு வழியாக பெர்மிஷன் கொடுத்து விட்டாராம் சூர்யா. அது பிரஷாந்த்மூன்று விதமான வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ள ஜாம்பவான் படம்.

விஜயகாந்த்தின் தென்னவன் படத்தை இயக்கிய நந்தகுமார் இயக்கும் இரண்டாவது படம் தான் இந்த ஜாம்பவான்.

பிரஷாந்த்துக்கு இதில் இரண்டு ஜோடிகள். ஒருவர் நிலா. இன்னொருவர் கவர்ச்சி காந்தமான மேக்னா நாயுடு. இருநாயகிகளுக்குமே இப்படத்தில் கிளாமர்தான் பிரதானம் என்று கூறியே புக் செய்துள்ளார்களாம்.

வித்தியாசமான கதைக்களம் என்று கூறப்படும் ஜாம்பவான் படத்தில் இவர்கள் தவிர காமடிக்கு விவேக்கை சேர்த்துள்ளார்கள்.விஜயக்குமார், சத்யன், பெப்சி விஜயன், மதுரை டி.என்.சேஷகோபாலன் ஆகியோரும் மாறுபட்ட பாத்திரங்களில் வரவுள்ளார்கள்.

நிலா மேட்டருக்கு வருவோம். இப்படத்தில் நடிக்க நிலா சில நிபந்தனைகள் (யார் சொல்லின்னு உங்களுக்குத் தெரியாதாக்கும்!)போட்டுள்ளாராம். அதை இயக்குனர் நந்தகுமார் தட்டாமல் ஏற்றுக் கொண்டுள்ளாராம். இருப்பினும் கவர்ச்சிக் காட்சிகளுக்குமட்டும் ரொம்ப பிகு செய்யவில்லையாம் நிலா.

அதேபோல, மேக்னா நாயுடுவும் இதில் கிளாமரில் புகுந்து விளையாட தலையாட்டிவிட்டாராம்.

அவர் நடித்துள்ள முதல் தமிழ்ப் படமான வீராசாமி (டி.ராஜேந்தர் இயக்கி வருகிறார்) ரொம்ப காலமாக தயாரிப்பில் உள்ளநிலையில் இந்தப் படம் தமிழில் தனக்கு நல்ல பிரேக் தரும் என்று நம்புகிறார்.

பிரஷாந்த்தின் கட்டழகுடன், தனது கிளாமர் கடலும் சங்கமித்தால், நிச்சயம் சுனாமிதான் என்று உறுதியாக நம்பும் மேக்னா,படத்தின் கதையும் தனக்குப் பிடித்ததால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறுகிறார்.

இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ள மேக்னா, டி.ராஜேந்தரின் புத்திரனான சிம்புவுடன், சரவணா படத்தில் ஒத்தப் பாட்டுக்குசெம குத்து குத்தியுள்ளார். அப்பாவின் நாயகி என்ற கூச்சம் எதுவுமில்லாமல், மேக்னாவுடன் செம ஆட்டம் போட்டுள்ளாராம்சிம்புவும்.

பரத்வாஜ் இசையமைக்க வருகிற 11ம் தேதி சென்னையில் ஜாம்பவான் படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள். அப்படியே மதுரை,தேனி, தென்காசி என படப்பிடிப்பை தொடரவுள்ள படக் குழுவினர் பாடல் காட்சிகளை மட்டும் மொரிஷியஷில் சுட உள்ளனர்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் எஸ்.ஜே. சூர்யா இயக்கும் புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம் நிலா.

நிலாவை விட மாட்டீங்குறாரே இந்த சூர்யா.

Read more about: nila to act with prashanth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X