»   »  நிலா- பிரஷாந்த்- மேக்னா நிலா, மேக்னா நாயுடு, பிரஷாந்த் நடிக்கும் ஜாம்பவான் படத்துக்கு திருப்பதியில் பூஜை போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.பூஜை போட்டு முடித்த கையோட அங்கேயே படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார்கள். திருப்பதியில் பூஜை போட்ட முதல் தமிழப் படம் என்ற பெருமை ஜாம்பாவன்படத்துக்கு கிடைத்துள்ளது.பிரசாந்த் அவரது மனைவி கிரகலட்சுமி, தியாகராஜன், தாயார் சாந்தி, தங்கை பிரீத்தி என்று குடும்ப சகிதமாக திருப்பதியில் ஆஜராகிவிட்டார். மேலும் தயாரிப்பாளர்டி.டி.ராஜா, இயக்குனர் நந்தகுமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் ஆகியோர் பயபக்தியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கினர்.ஜாம்பவான் செய்தால் அது வெற்றி தான் என்று பிரசாந்த் முதல் வசனம் பேசிய காட்சி படமாக்கப்பட்ட பிறகு எல்லாருக்கும் திருப்பதி லட்டு பிரசாதமாகவழங்கப்பட்டது. படத்தில் பிரசாந்த்துக்கு இதுவரை நடித்திராத குடும்ப பாங்கு கலந்த மிரட்டலான ஆக்ஷன் வேடமாம். முதன் முறையாக மூன்று கெட்-அப்களில் தோன்றி நடிப்பில்வித்தியாசம் காட்டவுள்ளார்.இந்த படத்தில் ரசிகர்களை சாமி ஆட வைக்கும் ஒரு பாடலை மொரீசியஸ் தீவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்க உள்ளார்களாம்.இந்தப் பாடலில் நிலா, மேக்னா நாயுடு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியை பிழியப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே நமது கையில் திருப்பதிலட்டை கொடுத்தார் இயக்குனர் நந்தகுமார்.இந்தப் படத்தில் விவேக் தவிர கர்நாடக இசைமேதை டி.என்.சேஷகோபாலனும் நடிக்கிறாராம். பிரசாந்த்தின் உடலை முறுக்கேற்ற மும்பையிலிருந்து ஸ்பெஷல் உடற்பயிற்சி நிபுணர்கள் வரவழைக்கப்படுகின்றனராம்.தென்காசி, குற்றாலம், பாலக்காடு, மதுரை என சூட்டிங்கை நடத்தவுள்ளார்களாம்.படத்தைத் தயாரிக்கும் டி.டி.ராஜா, எஸ்.சத்யநாராயணன் ஆகியோர் பிரபல பைனான்சியர்கள் மட்டுமல்ல ரியல் எஸ்டேட் பிசினசிலும கொடி கட்டிப் பறப்பவர்கள்.பரத்வாஜ் இசையமைக்க சுந்தரம், சிவசங்கர், தினேஷ். பிருந்தா, கூல் ஜெயந்த் ஆகியோர் நடனத்தை கவனிக்க பிரமாண்டமாகவே படத்தைத் தயாரிக்கிறார்கள்.

நிலா- பிரஷாந்த்- மேக்னா நிலா, மேக்னா நாயுடு, பிரஷாந்த் நடிக்கும் ஜாம்பவான் படத்துக்கு திருப்பதியில் பூஜை போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.பூஜை போட்டு முடித்த கையோட அங்கேயே படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார்கள். திருப்பதியில் பூஜை போட்ட முதல் தமிழப் படம் என்ற பெருமை ஜாம்பாவன்படத்துக்கு கிடைத்துள்ளது.பிரசாந்த் அவரது மனைவி கிரகலட்சுமி, தியாகராஜன், தாயார் சாந்தி, தங்கை பிரீத்தி என்று குடும்ப சகிதமாக திருப்பதியில் ஆஜராகிவிட்டார். மேலும் தயாரிப்பாளர்டி.டி.ராஜா, இயக்குனர் நந்தகுமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் ஆகியோர் பயபக்தியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கினர்.ஜாம்பவான் செய்தால் அது வெற்றி தான் என்று பிரசாந்த் முதல் வசனம் பேசிய காட்சி படமாக்கப்பட்ட பிறகு எல்லாருக்கும் திருப்பதி லட்டு பிரசாதமாகவழங்கப்பட்டது. படத்தில் பிரசாந்த்துக்கு இதுவரை நடித்திராத குடும்ப பாங்கு கலந்த மிரட்டலான ஆக்ஷன் வேடமாம். முதன் முறையாக மூன்று கெட்-அப்களில் தோன்றி நடிப்பில்வித்தியாசம் காட்டவுள்ளார்.இந்த படத்தில் ரசிகர்களை சாமி ஆட வைக்கும் ஒரு பாடலை மொரீசியஸ் தீவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்க உள்ளார்களாம்.இந்தப் பாடலில் நிலா, மேக்னா நாயுடு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியை பிழியப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே நமது கையில் திருப்பதிலட்டை கொடுத்தார் இயக்குனர் நந்தகுமார்.இந்தப் படத்தில் விவேக் தவிர கர்நாடக இசைமேதை டி.என்.சேஷகோபாலனும் நடிக்கிறாராம். பிரசாந்த்தின் உடலை முறுக்கேற்ற மும்பையிலிருந்து ஸ்பெஷல் உடற்பயிற்சி நிபுணர்கள் வரவழைக்கப்படுகின்றனராம்.தென்காசி, குற்றாலம், பாலக்காடு, மதுரை என சூட்டிங்கை நடத்தவுள்ளார்களாம்.படத்தைத் தயாரிக்கும் டி.டி.ராஜா, எஸ்.சத்யநாராயணன் ஆகியோர் பிரபல பைனான்சியர்கள் மட்டுமல்ல ரியல் எஸ்டேட் பிசினசிலும கொடி கட்டிப் பறப்பவர்கள்.பரத்வாஜ் இசையமைக்க சுந்தரம், சிவசங்கர், தினேஷ். பிருந்தா, கூல் ஜெயந்த் ஆகியோர் நடனத்தை கவனிக்க பிரமாண்டமாகவே படத்தைத் தயாரிக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil
நிலா, மேக்னா நாயுடு, பிரஷாந்த் நடிக்கும் ஜாம்பவான் படத்துக்கு திருப்பதியில் பூஜை போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.

பூஜை போட்டு முடித்த கையோட அங்கேயே படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார்கள். திருப்பதியில் பூஜை போட்ட முதல் தமிழப் படம் என்ற பெருமை ஜாம்பாவன்படத்துக்கு கிடைத்துள்ளது.

பிரசாந்த் அவரது மனைவி கிரகலட்சுமி, தியாகராஜன், தாயார் சாந்தி, தங்கை பிரீத்தி என்று குடும்ப சகிதமாக திருப்பதியில் ஆஜராகிவிட்டார். மேலும் தயாரிப்பாளர்டி.டி.ராஜா, இயக்குனர் நந்தகுமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் ஆகியோர் பயபக்தியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கினர்.

ஜாம்பவான் செய்தால் அது வெற்றி தான் என்று பிரசாந்த் முதல் வசனம் பேசிய காட்சி படமாக்கப்பட்ட பிறகு எல்லாருக்கும் திருப்பதி லட்டு பிரசாதமாகவழங்கப்பட்டது.

படத்தில் பிரசாந்த்துக்கு இதுவரை நடித்திராத குடும்ப பாங்கு கலந்த மிரட்டலான ஆக்ஷன் வேடமாம். முதன் முறையாக மூன்று கெட்-அப்களில் தோன்றி நடிப்பில்வித்தியாசம் காட்டவுள்ளார்.

இந்த படத்தில் ரசிகர்களை சாமி ஆட வைக்கும் ஒரு பாடலை மொரீசியஸ் தீவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்க உள்ளார்களாம்.

இந்தப் பாடலில் நிலா, மேக்னா நாயுடு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியை பிழியப் போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே நமது கையில் திருப்பதிலட்டை கொடுத்தார் இயக்குனர் நந்தகுமார்.

இந்தப் படத்தில் விவேக் தவிர கர்நாடக இசைமேதை டி.என்.சேஷகோபாலனும் நடிக்கிறாராம்.

பிரசாந்த்தின் உடலை முறுக்கேற்ற மும்பையிலிருந்து ஸ்பெஷல் உடற்பயிற்சி நிபுணர்கள் வரவழைக்கப்படுகின்றனராம்.

தென்காசி, குற்றாலம், பாலக்காடு, மதுரை என சூட்டிங்கை நடத்தவுள்ளார்களாம்.

படத்தைத் தயாரிக்கும் டி.டி.ராஜா, எஸ்.சத்யநாராயணன் ஆகியோர் பிரபல பைனான்சியர்கள் மட்டுமல்ல ரியல் எஸ்டேட் பிசினசிலும கொடி கட்டிப் பறப்பவர்கள்.

பரத்வாஜ் இசையமைக்க சுந்தரம், சிவசங்கர், தினேஷ். பிருந்தா, கூல் ஜெயந்த் ஆகியோர் நடனத்தை கவனிக்க பிரமாண்டமாகவே படத்தைத் தயாரிக்கிறார்கள்.

Read more about: nila and meghna in jambavan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil