twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிலாவுக்கு தடா.. தமிழும் தெலுங்கும் கூட்டாக ஆப்பு அதிகப் பணம் கிடைக்கும் என்பதால் தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக தமிழ்ப் படமான ஜாம்பவான் பட இயக்குனர்,தயாரிப்பாளரிடம் வேண்டும் என்றே தகராறு செய்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஹைதராபாத்துக்கு ஓடிய நடிகைநிலாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் தடை விதித்துள்ளன.அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் நிலா. சூர்யாவின் கட்டுப்பாட்டில் அவரதுஅலுவலகத்தில் தங்கியிருந்துதான் மற்ற படங்களில் நடித்து வருகிறார்.பிரஷாந்த்துடன் ஜோடியாக நடிக்கும் ஜாம்பவான் படப்பிடிப்புக்காக நிலா குற்றாலம் சென்றிருந்தார். படப்பிடிப்பின்போதுகுளியல் காட்சியின்போது, மினரல் வாட்டரில்தான் குளிப்பேன் வேறு தண்ணீரில் குளிக்க மாட்டேன் என்று தகராறு செய்துகோபத்துடன் குற்றாலத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனார்.ஆனால், தன்னை தயாரிப்பாளரும் இயக்குனரும் அடித்ததாகவும், கையை முறுக்கி அறைந்ததாகவும் புகார் கூறிய நிலாகுற்றாலத்தில் இருந்து கிளம்பி, தனது தங்கும் இடமான சென்னைக்கு வராமல் ஹைதாபாத்துக்கு ஓடியது அனைவருக்கும்சந்தேகத்தை வரவழைத்தது.மேற்கொண்டு நடந்த விசாரணையில் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற புதிய தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காகவே வேண்டும்என்றே தகராறு செய்து விட்டு, தயாரிப்பாளர் மீது புகாரும் சொல்லிவிட்டு, ஹைதராபாத்துக்கு நிலா ஓடியது தெரிய வந்துள்ளது.நிலாவின் போக்கு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் தாங்கள் கற்பழிக்க முயன்றதாக புகார்கொடுக்குப் போவதாவும் தங்களை நிலா மிரட்டியதாக ஜாம்பவான் தயாரிப்பாளரும் இயக்குனரும் புகார் தந்தனர்.இந்தப் புகார் தொடர்பாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தலைவர் டி.ஜி.தியாகராஜன் தலைமையில் கூடி ஆலோசனைநடத்தினர்.கூட்டத்திற்குப் பின்னர் துணைத் தலைவர் அழகப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சத்தியம் சிவம் சுந்தரம் என்றதெலுங்குப் படத்தில் நிலா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சித்திக் இப்படத்தை இயக்குகிறார். இதில் நடிப்பதற்காகவே,தேவையில்லாமல் தகராறு செய்து கொண்டு ஹைதராபாத்துக்கு ஓடியிருக்கிறார் நிலா.தெலுங்குப் பட அதிபர்களே இதை உறுதி செய்துள்ளனர். எனவே ஜாம்பவான் படத்தை நிலா உடனடியாக முடித்துத் தர வேண்டும்.அதுவரை அவரை புதிய படங்களில் யாரும் ஒப்பந்தம் செய்யக் கூடாது.ஜாம்பவான் படத்தை முடித்துக் கொடுக்கும் வரை வேறு படங்களில் நிலா நடிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.இதேபோன்ற தடை உத்தரவை தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் எடுத்துள்ளது. ஒப்புக்கொண்ட படங்களைமுடித்து விட்டுத்தான் நிலா புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்களும்உத்தரவிட்டுள்ளனர் என்றார் அழகப்பன்.தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த தடை உத்தரவால் புதிய படங்களில் நடிக்க முடியாத நிலைக்கு நிலா தள்ளப்பட்டுள்ளார்.ஆனால் ஏற்கனவே ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் நிலா பேசியபோது, எனக்கு தடை விதித்தால் நான் கவலைப்படப்போவதில்லை, தமிழ் சினிமாவை மட்டும் நம்பி நான் இல்லை, பிழைப்புக்கு ஆயிரம் தொழில்கள் உள்ளது என்றுதெனாவட்டாகக் கூறியிருந்தார்.எங்க அப்பா பெரிய கோடீஸ்வரர், நான் நடித்துத் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நான்டெல்லிக்கே போகிறேன் என்று சொன்ன நிலா, ஜாம்பவான் படத்தை பாதியில் விட்டுவிட்டு ஹைதாராபாத்துக்குப் போய் அங்குதயாரிப்பாளரிடம் அட்வான்ஸை வாங்க முயன்றார்.தெலுங்கில் பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டதால் தமிழ் படத்தை பாதியில் விட்டதோடு, தயாரிப்பாளர் மீதுஅபாண்டத்தையும் சுமத்திவிட்டுப் போயிருக்கிறார்.கலர் தோலை மட்டும் பார்த்து, நல்ல கலைஞர்களை கண்டுகொள்ளாமல் விட்டு, வடக்கை நோக்கி தவம் இருக்கும் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களே இனியாவது திருந்துங்கள், சுதாரியுங்கள்.

    By Staff
    |
    அதிகப் பணம் கிடைக்கும் என்பதால் தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக தமிழ்ப் படமான ஜாம்பவான் பட இயக்குனர்,தயாரிப்பாளரிடம் வேண்டும் என்றே தகராறு செய்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஹைதராபாத்துக்கு ஓடிய நடிகைநிலாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் தடை விதித்துள்ளன.

    அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் நிலா. சூர்யாவின் கட்டுப்பாட்டில் அவரதுஅலுவலகத்தில் தங்கியிருந்துதான் மற்ற படங்களில் நடித்து வருகிறார்.

    பிரஷாந்த்துடன் ஜோடியாக நடிக்கும் ஜாம்பவான் படப்பிடிப்புக்காக நிலா குற்றாலம் சென்றிருந்தார். படப்பிடிப்பின்போதுகுளியல் காட்சியின்போது, மினரல் வாட்டரில்தான் குளிப்பேன் வேறு தண்ணீரில் குளிக்க மாட்டேன் என்று தகராறு செய்துகோபத்துடன் குற்றாலத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனார்.

    ஆனால், தன்னை தயாரிப்பாளரும் இயக்குனரும் அடித்ததாகவும், கையை முறுக்கி அறைந்ததாகவும் புகார் கூறிய நிலாகுற்றாலத்தில் இருந்து கிளம்பி, தனது தங்கும் இடமான சென்னைக்கு வராமல் ஹைதாபாத்துக்கு ஓடியது அனைவருக்கும்சந்தேகத்தை வரவழைத்தது.

    மேற்கொண்டு நடந்த விசாரணையில் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற புதிய தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காகவே வேண்டும்என்றே தகராறு செய்து விட்டு, தயாரிப்பாளர் மீது புகாரும் சொல்லிவிட்டு, ஹைதராபாத்துக்கு நிலா ஓடியது தெரிய வந்துள்ளது.

    நிலாவின் போக்கு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் தாங்கள் கற்பழிக்க முயன்றதாக புகார்கொடுக்குப் போவதாவும் தங்களை நிலா மிரட்டியதாக ஜாம்பவான் தயாரிப்பாளரும் இயக்குனரும் புகார் தந்தனர்.

    இந்தப் புகார் தொடர்பாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தலைவர் டி.ஜி.தியாகராஜன் தலைமையில் கூடி ஆலோசனைநடத்தினர்.

    கூட்டத்திற்குப் பின்னர் துணைத் தலைவர் அழகப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சத்தியம் சிவம் சுந்தரம் என்றதெலுங்குப் படத்தில் நிலா ஒப்பந்தம் ஆகியுள்ளார். சித்திக் இப்படத்தை இயக்குகிறார். இதில் நடிப்பதற்காகவே,தேவையில்லாமல் தகராறு செய்து கொண்டு ஹைதராபாத்துக்கு ஓடியிருக்கிறார் நிலா.

    தெலுங்குப் பட அதிபர்களே இதை உறுதி செய்துள்ளனர். எனவே ஜாம்பவான் படத்தை நிலா உடனடியாக முடித்துத் தர வேண்டும்.அதுவரை அவரை புதிய படங்களில் யாரும் ஒப்பந்தம் செய்யக் கூடாது.

    ஜாம்பவான் படத்தை முடித்துக் கொடுக்கும் வரை வேறு படங்களில் நிலா நடிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

    இதேபோன்ற தடை உத்தரவை தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் எடுத்துள்ளது. ஒப்புக்கொண்ட படங்களைமுடித்து விட்டுத்தான் நிலா புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்களும்உத்தரவிட்டுள்ளனர் என்றார் அழகப்பன்.

    தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த தடை உத்தரவால் புதிய படங்களில் நடிக்க முடியாத நிலைக்கு நிலா தள்ளப்பட்டுள்ளார்.

    ஆனால் ஏற்கனவே ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் நிலா பேசியபோது, எனக்கு தடை விதித்தால் நான் கவலைப்படப்போவதில்லை, தமிழ் சினிமாவை மட்டும் நம்பி நான் இல்லை, பிழைப்புக்கு ஆயிரம் தொழில்கள் உள்ளது என்றுதெனாவட்டாகக் கூறியிருந்தார்.

    எங்க அப்பா பெரிய கோடீஸ்வரர், நான் நடித்துத் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நான்டெல்லிக்கே போகிறேன் என்று சொன்ன நிலா, ஜாம்பவான் படத்தை பாதியில் விட்டுவிட்டு ஹைதாராபாத்துக்குப் போய் அங்குதயாரிப்பாளரிடம் அட்வான்ஸை வாங்க முயன்றார்.

    தெலுங்கில் பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டதால் தமிழ் படத்தை பாதியில் விட்டதோடு, தயாரிப்பாளர் மீதுஅபாண்டத்தையும் சுமத்திவிட்டுப் போயிருக்கிறார்.

    கலர் தோலை மட்டும் பார்த்து, நல்ல கலைஞர்களை கண்டுகொள்ளாமல் விட்டு, வடக்கை நோக்கி தவம் இருக்கும் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களே இனியாவது திருந்துங்கள், சுதாரியுங்கள்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X