நொம்பலத்தில் நிலா! சின்ன சிம்ரன், செக்ஸி டால், நேவல் ராணி என்று எப்படியெல்லாமோ பேசப்பட்டநிலா இப்போது சீந்துவாரின்றி சுணங்கிப் போய்க் கிடக்கிறார்.அ..ஆ என்று முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தவர் நிலா. சிம்ரனின்ஆல்டர்நேட்டிவ் என்று இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவால் கொண்டு வரப்பட்ட நிலாபெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் எந்த இடத்திலிருந்து ஆரம்பித்தாரோ அதே இடத்தில் இப்போது வந்துநிற்கிறார் இந்த டெல்லி குட்டிக் குதிரை.இவரை வைத்துப் படம் எடுத்தால் ஏகப்பட்ட சங்கடம் என்ற இமேஜ் ஜாம்பவான்மூலம் உருவாகி விட்டதால் நிலாவை புக் பண்ண தயாரிப்பாளர்களும்,இயக்குனர்களும் ரொம்பவே யோசிக்கிறார்களாம்.இத்தனைக்கும் ஜாம்பவான் யூனிட்டாருக்கு இப்போது மிகுந்த ஒத்துழைப்பு தந்துஅசத்திக் கொண்டுள்ளார் நிலா.ஜாம்பவான் யூனிட் மன்னிப்பு கேட்டதால் தான் மீண்டும் அதில் நடிக்க வந்தேன்என்று நிலா கூறினாலும், முக்கியக் காரணம், அவருக்கு வேறு படம் எதுவும் புக்ஆகவில்லை என்பது தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.ஜாம்பவானையும் விட்டு விட்டால் தமிழில் ஒரு படமும் தேறாது என்று தான்கிராக்கியிலிருந்து இறங்கி வந்து ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளாராம். முன்பு செய்தபிரச்சனைகள் எதுவும் இல்லாமல் ஒத்துழைப்பு தந்து வருகிறார் நிலா.ஆனால், இறங்கி வந்தும் கூட ஒரு புண்ணியமும் இல்லையாம்ய ஜாம்பவான் தவிரநிலாவிடம் ஒரு பட வாய்ப்பும் இல்லை.யாரும் அவரைத் தேடியும் வரவில்லை. இதையடுத்து தனது பி.ஆர்.ஓவை விட்டுபலரையும் அணுகிப் பார்த்துள்ளார் நிலா. ஆனால் நிலாவின் பெயரைக் கேட்டாலே,அய்யய்யோ அவரா என்று காத தூரம் ஓடிப் போய் விடுகிறார்களாம்தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்.கோடி கோடியாக கொட்டிப் படம் எடுக்கிறோம். இவர் பாட்டுக்கு திடீரெனடெல்லிக்கும், ஹைதராபாத்துக்கும் ஓடிப் போய் விட்டால் எங்கே போய் முட்டிக்கொள்வது என்ற பயம்தான் இதற்குக் காரணம்.இதனால் நிலா ரொம்ப நொம்பலப்பட்டு கிடக்கிறார். இப்போது அவருக்குள்ள ஒரேஆறுதல் தெலுங்கு தான். அங்கு ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்தபடத்துக்காகக் காத்திருக்கிறார்.

By Staff

சின்ன சிம்ரன், செக்ஸி டால், நேவல் ராணி என்று எப்படியெல்லாமோ பேசப்பட்டநிலா இப்போது சீந்துவாரின்றி சுணங்கிப் போய்க் கிடக்கிறார்.

அ..ஆ என்று முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தவர் நிலா. சிம்ரனின்ஆல்டர்நேட்டிவ் என்று இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவால் கொண்டு வரப்பட்ட நிலாபெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எந்த இடத்திலிருந்து ஆரம்பித்தாரோ அதே இடத்தில் இப்போது வந்துநிற்கிறார் இந்த டெல்லி குட்டிக் குதிரை.


இவரை வைத்துப் படம் எடுத்தால் ஏகப்பட்ட சங்கடம் என்ற இமேஜ் ஜாம்பவான்மூலம் உருவாகி விட்டதால் நிலாவை புக் பண்ண தயாரிப்பாளர்களும்,இயக்குனர்களும் ரொம்பவே யோசிக்கிறார்களாம்.

இத்தனைக்கும் ஜாம்பவான் யூனிட்டாருக்கு இப்போது மிகுந்த ஒத்துழைப்பு தந்துஅசத்திக் கொண்டுள்ளார் நிலா.

ஜாம்பவான் யூனிட் மன்னிப்பு கேட்டதால் தான் மீண்டும் அதில் நடிக்க வந்தேன்என்று நிலா கூறினாலும், முக்கியக் காரணம், அவருக்கு வேறு படம் எதுவும் புக்ஆகவில்லை என்பது தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.


ஜாம்பவானையும் விட்டு விட்டால் தமிழில் ஒரு படமும் தேறாது என்று தான்கிராக்கியிலிருந்து இறங்கி வந்து ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளாராம். முன்பு செய்தபிரச்சனைகள் எதுவும் இல்லாமல் ஒத்துழைப்பு தந்து வருகிறார் நிலா.

ஆனால், இறங்கி வந்தும் கூட ஒரு புண்ணியமும் இல்லையாம்ய ஜாம்பவான் தவிரநிலாவிடம் ஒரு பட வாய்ப்பும் இல்லை.

யாரும் அவரைத் தேடியும் வரவில்லை. இதையடுத்து தனது பி.ஆர்.ஓவை விட்டுபலரையும் அணுகிப் பார்த்துள்ளார் நிலா. ஆனால் நிலாவின் பெயரைக் கேட்டாலே,அய்யய்யோ அவரா என்று காத தூரம் ஓடிப் போய் விடுகிறார்களாம்தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்.


கோடி கோடியாக கொட்டிப் படம் எடுக்கிறோம். இவர் பாட்டுக்கு திடீரெனடெல்லிக்கும், ஹைதராபாத்துக்கும் ஓடிப் போய் விட்டால் எங்கே போய் முட்டிக்கொள்வது என்ற பயம்தான் இதற்குக் காரணம்.

இதனால் நிலா ரொம்ப நொம்பலப்பட்டு கிடக்கிறார். இப்போது அவருக்குள்ள ஒரேஆறுதல் தெலுங்கு தான். அங்கு ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்தபடத்துக்காகக் காத்திருக்கிறார்.

Read more about: nila in trouble in kollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X