ப்பா.. சித்தா பட நடிகையா இது?.. அருவிக்குள்ள அப்படியொரு ஆனந்தக் குளியல்.. உருகிப்போன ரசிகாஸ்!
சென்னை: சித்தா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிஷன் சாப்டர் 1 உள்ளிட்ட படங்களில் நடித்து செம ஸ்கோர் செய்த மலையாள நடிகை நிமிஷா சஜயன் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள அருவி அருகே குளிக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. 26 வயதே ஆகும் நிமிஷா சஜயன் பகத் ஃபாசில் நடித்த மாலிக் படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து மிரட்டியிருப்பார்.
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நயாட்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், ஒரு தெக்கன் தள்ளு கேஸ் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் அதிரடியாக நடித்து அசத்தி வந்த நிமிஷா சஜயன் கடந்த ஆண்டு தமிழில் இரண்டு சிறந்த படங்களில் பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருந்தார்.

இந்நிலையில், சம்மர் விடுமுறையை முன்னிட்டு அருவிக்கு சென்ற நிமிஷா சஜயன் அங்கே கவர்ச்சி உடையில் குளிக்கும் போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிக லைக்குகளை அள்ளியுள்ளார்.
படங்களில் தான் அப்படி: 26 வயதான நிமிஷா சஜயன் வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களில் தான் இதுவரை நடித்து வருகிறார். சித்தா படத்திலேயே சித்தார்த்துக்கு அக்காவா இவர் என கேட்கும் அளவுக்கு அவரது தோற்றம் ரொம்பவே முதிர்ச்சியாக இருந்தது. அதே போல ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் புள்ளத்தாச்சி பெண்ணாகவே நடித்திருப்பார். ஆனால், சோஷியல் மீடியாவில் ஆளே வேற மாதிரியான டைப்பாக உள்ளார்.
தமிழிலும் டாப்: மலையாள படங்களில் மாஸ் காட்டி வந்த இவர் தமிழிலும் தொடர்ந்து தூள் கிளப்பி வருகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸின் மனைவியாக படம் முழுக்க நடித்திருப்பார். பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் அவர் படு போல்டாக நடித்ததை பார்த்து பலரும் ஃபயர் விட்டு இருந்தனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஜோதிகாவுடன் இணைந்து: இந்தியில் உருவாகி வரும் டப்பா கார்டல் வெப்சீரிஸில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் அந்த வெப்சீரிஸ் வெளியாக காத்திருக்கிறது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான போச்சர் வெப்சீரிஸிலும் நிமிஷா சஜயன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சினிமா மற்றும் ஓடிடி என அடுத்தடுத்து பிசியாகவே உள்ளார்.

அருவியில் ஆனந்தக் குளியல்: அடிக்கடி சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு எனக்கு இந்த மாதிரியும் நடிக்க சான்ஸ் கொடுங்க என்றே உணர்த்தி வருகிறார் நிமிஷா சஜயன். நல்ல நடிகையாக இவர் உள்ள நிலையில், போல்டான மற்றும் மெச்சூரான கதாபாத்திரங்களே இவருக்கு தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இந்நிலையில், அருவியில் ஆனந்தக் குளியல் போடும் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி உள்ளார் நிமிஷா சஜயன்.
கவர்ச்சி தரிசனம்: கவர்ச்சி உடையில் நிமிஷா சஜயன் அருவியில் குளியல் போட்ட போட்டோக்களை ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து வருகின்றனர். காலையிலேயே இப்படி கண்கொள்ளா கவர்ச்சி தரிசனம் காட்டுறீங்களே நிமிஷா என ஏகப்பட்ட ஃபயர் எமோஜிக்களையும் ஹார்ட்டீன் எமோஜிக்களையும் ரசிகர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











