Nimisha Sajayan: யம்மாடியோவ்.. அரை டவுசரில் அலற விடும் சித்தா நடிகை.. செம ஸ்லிம்மாகிட்டாரே நிமிஷா!
சென்னை: இந்த ஆண்டு சித்தா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் நடித்து செம ஸ்கோர் செய்த மலையாள நடிகை நிமிஷா சஜயன் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. 26 வயதே ஆகும் நிமிஷா சஜயன் பகத் ஃபாசில் நடித்த மாலிக் படத்தில் வயதான தோற்றத்தில் அட்டகாசமாக நடித்து வியக்க வைத்திருந்தார்.
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நயாட்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், ஒரு தெக்கன் தள்ளு கேஸ் உள்ளிட்ட பல படங்களில் கட கடவென நடித்து அசத்தி வந்த நிமிஷா சஜயன் இந்த ஆண்டு தமிழில் இரண்டு சிறந்த படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருந்தார்.

அரை டவுசரில் நிமிஷா: 26 வயதான நிமிஷா சஜயன் வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களில் தான் இதுவரை நடித்து வந்தார். சித்தா படத்திலேயே சித்தார்த்துக்கு அக்காவா இவர் என கேட்கும் அளவுக்கு அவரது தோற்றம் ரொம்பவே முதிர்ச்சியாக இருந்தது. ஆனால், தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி அரை டவுசரில் கலக்கல் போட்டோக்களை களமிறக்கி ரசிகர்களை கப்சிப் ஆக்கி உள்ளார்.
சித்தா, ஜிகர்தண்டா 2 ஹீரோயின்: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸின் மனைவியாக படம் முழுக்க நடித்திருப்பார். பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் அவர் படு போல்டாக நடித்ததை பார்த்து பலரும் ஃபயர் விட்டு இருந்தனர். ஆனாலும், நிமிஷா சஜயன் உடல் எடையை வைத்து பாடி ஷேமிங் ட்ரோல்களும் அரங்கேறி வந்தன. இந்நிலையில், கடும் வொர்க்கவுட் செய்து செம ஸ்லிம்மாக மாறி விட்டார் நிமிஷா சஜயன்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: மலையாள நடிகைகள் பலரும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என்பது போல நிமிஷா சஜயன் வெளியிட்டு இருக்கும் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருக்கிறது.
அரை டவுசரில் அலப்பறை: தனது செல்ல நாய்க்குட்டியுடன் அரை டவுசர் அணிந்துக் கொண்டு தலையில் கிறிஸ்துமஸ் குல்லாவை போட்டுக் கொண்டு வீட்டில் செம கேஷுவலாக இருப்பது போல நிமிஷா சஜயன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் தற்போது தீயாக பரவி வருகிறது. இந்த ஆண்டு சிறந்த தமிழ் நடிகைக்கான விருதுகளையும் பல மேடைகளில் இவர் வெல்வார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பொங்கலுக்கு படம் வருது: நிமிஷா சஜயன் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில், வரும் பொங்கலுக்கு தமிழிலும் அவர் நடித்துள்ள ஒரு படம் வெளியாகிறது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிமிஷா வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் தின கொண்டாட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் எக்கச்சக்கமாக லைக்குகளும் அவரது லேட்டஸ்ட் லுக்கை பார்த்து வாவ், கிளாமர் ரோலிலும் நீங்க நடிக்கலாம் பேபி என கொஞ்ச ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











