Year Ender 2023: நிமிர்ந்து நிற்கும் நிமிஷா சஜயன்.. 26 வயதில் என்னவொரு நடிப்பு.. தங்கம் சார்!

சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து 2 படங்களில் அற்புதமான நடிப்பை கொடுத்து ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளி உள்ளார் நிமிஷா சஜயன். இவர் ஒரு 90ஸ் கிட் என்றும் 26 வயது தான் ஆகுது என்று சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சியை அசால்ட்டாக வெளிப்படுத்தி வாயை பிளக்க வைக்கிறார்.

சித்தார்த் நடிப்பில் அத்தி பூத்தார் போல நல்ல படமாக இந்த ஆண்டு வெளியான சித்தா படத்தில் துப்புரவு தொழிலாளியாக நடித்திருப்பார். அங்கே இருந்து இங்கே நடந்து வருவதற்குள் எத்தனை ஆண்கள் என் மார பார்த்தாங்க தெரியுமா என அவர் பேசும் ஒற்றை வசனம் ஆண் சமூகத்திற்கு எதிராக சுழற்றப்பட்ட சாட்டையடியாகவே விழுந்தது.

Nimisha Sajayn rewriting heroine grammar in Kollywood this year 2023

தமிழ் சினிமாவில் சரிதா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை எத்தனையோ கருப்பு நிற கட்டழகிகள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் லேட்டஸ்ட் இணைப்பாக கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி செம சிக்ஸர் அடித்து வரும் இவர் ஹீரோயின் என்றால் ஸ்லிம்மாக இருக்கணும், செகப்பா இருக்கணும் என்கிற ஸ்டீரியோ டைப்களை எல்லாம் உடைத்து இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 2 படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார்.

மலையாள நடிகை: மும்பையில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர் நிமிஷா சஜயன். அம்மா அப்பா இருவருமே மலையாளிகள் தான். ஆனால், இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையெல்லாம் முடிச்சது மும்பையில் தான். சினிமாவில் இருந்த ஆர்வம் இவருக்கு 2017ல் மலையாளத்தில் வெளியான கேர் ஆஃப் சாய்ரா பானு எனும் படத்தில் மஞ்சு வாரியர், அமலா அக்கினேனி உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

தி கிரேட் இந்தியன் கிச்சன்: 2021ம் ஆண்டு ஜோ பேபி இயக்கத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் இவரது எதார்த்த நடிப்பை பார்த்து பலரும் ஆடிப்போய்விட்டனர். மலையாளத்தில் சமீபத்தில் வெற்றிப் பெற்ற நயாட்டு, நாயகன் ஸ்டைலில் பகத் ஃபாசில் நடித்த மாலிக், ஒரு தெக்கன் தள்ளு கேஸ், துறாமுகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி வந்த இவரை அலேக்காக இந்த ஆண்டு கோலிவுட்டுக்கு அருண்குமார் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் அழைத்து வந்து விட்டனர்.

சித்தா: சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா படத்தில் துப்புரவு தொழிலாளியாகவும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணாகவும் இவர் நடித்திருப்பார். ஹீரோயினுக்கு உண்டான அனைத்து இலக்கணங்களையும் சுக்குநூறாக உடைத்து சாதாரண பெண்களும் நிஜத்தில் ஹீரோயின்கள் தான் எனபதற்கு உதாரணமாக மாறி வருகிறார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: சித்தா படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக மெரட்டி விட்டு இருப்பார். மலைவாழ் பெண்ணாகவும் புள்ளத்தாச்சி பெண்ணாகவும் நடித்து கடைசியில் கணவனுடன் சேர்ந்து சாவை எதிர் நோக்கி அந்த தப்ப அடிக்கிற காட்சிகளில் எல்லாம் கலங்க வைத்திருப்பார். நல்ல படங்களை இயக்கும் இயக்குநர்கள் இன்னமும் இவரை அதிகம் பயன்படுத்தலாம் இந்த ஆண்டு நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார் நிமிஷா சஜயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X