மொய்தீன் பாய் சம்சாரம் பாத்திமா மொய்தீனை பார்த்து இருக்கீங்களா.. நிரோஷா வெளியிட்ட சூப்பர் பிக்ஸ்!
சென்னை: நடிகவேள் எம்.ஆர். ராதாவின் இளைய மகளும் நடிகை ராதிகாவின் தங்கையுமான நிரோஷா பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்துக்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் ஃபாத்திமா மொய்தீன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்த நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் உடன் எடுத்துக்கொண்ட சூப்பரான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சூப்பர் ஸ்டார் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விஜயுடன் கம்பேர் பண்ணாதீங்க: காக்கா - கழுகு கதை நடிகர் விஜய்க்காக சொன்னது இல்லை என்றும் தர்மதுரை படத்தில் படபிடிப்பின் போது நடிகர் விஜய் 13 வயது சிறுவன் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார் என அவரது அப்பா சந்திரசேகர் என்னிடம் சொன்னார், படித்துவிட்டு சினிமாவுக்கு வாப்பா என அட்வைஸ் செய்தேன். விஜய்க்கு போட்டி அவர்தான். எனக்கு போட்டி என் படங்கள் தான். விஜய்க்கும் எனக்கும் எப்போதுமே போட்டி இல்லை. எங்கள் இருவரையும் கம்பேர் பண்ணாதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசியிருந்தார் . அதன் பின்னர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே கடந்த ஆண்டு முழுவதும் நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்துவிட்டது.

ரசிகர்கள் உஷார்: என்னதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அப்பாவை கேமியோ ரோலில் நடிக்க வைத்தாலும் இந்த படம் ரஜினிகாந்த் படம் இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம்தான் லால் சலாம் என்பதால் ரசிகர்கள் அதிகப்படியாக அந்த படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதுவே அடுத்த ரஜினியின் வேட்டையின் திரைப்படம் வரும்போது அதன் முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என ரஜினி ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மொய்தீன் பாய் சம்சாரம்: லால் சலாம் படத்தில் விக்ராந்தின் அப்பாவாக மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவரது மனைவியாக பாத்திமா மொய்தீன் எனும் கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா முதன்முறையாக ரஜினிகாந்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் தலை சாய்த்துக் கொண்டு அவர் அழும் காட்சிகள் தியேட்டரில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது.

இரண்டாவது படத்திலேயே கமலுடன்: மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிரோஷா. அவரது நடிப்பை பார்த்த கமல்ஹாசன் தனது சூரசம்ஹாரம் படத்தில் ஜோடியாக ஆக்கினார். இரண்டாவது படத்திலேயே கமலுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நிரோஷா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை பெறவில்லை. பல ஆண்டுகள் கழித்து சீனியர் நடிகையான பின்னர் ராம்கியின் மனைவி நிரோசா தற்போது லால் சலாம் படத்தின் ரஜினிகாந்துடன் நடிக்கும் ஜாக்பாட் கிடைத்தது தனக்கு பெரும் சந்தோஷம் என சமீபத்திய பேட்டியில் பேசியிருந்தார்.
பாத்திமா மொய்தீன்: ரஜினிகாந்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் பாத்திமா மொய்தீன் கதாபாத்திரத்தில் நடித்த நிரோஷா அந்த படத்தில் ரஜினியுடன் படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நிரோஷா இனிமேல் படங்களிலும் அதிகம் தென்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











