ஹீரோயின்

By Staff

காதல் தோல்வியால் நடிகை நிரோஷா தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் மணிரத்தினத்தின் அக்னி நட்சத்திரம் படம் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிரோஷா. இவர் நடிகை ராதிகாவின் தங்கைஆவார்.

நடிகை நிரோஷா, நடிகர் ராம்கியுடன் இணைந்து, இணைந்த கைகள், செந்தூரப் பூவே, மருது பாண்டி ஆகிய படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையேகாதல் ஏற்பட்டது.

இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் இருவரும் சிறிது காலம் பிரிந்து இருந்தனர். பின்னர் மீண்டும் யாருக்கும் தெரியாமல்இருவரும் சந்தித்துப் பேசி தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர்.

இதையடுத்து இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இரண்டு பேருக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

காதல் தோல்வி ஏற்பட்டதால் மனமுடைந்த நிரோஷா விஷம் குடித்து ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. இன்னொரு தகவலின்படி நடிகை நிரோஷா தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை.தொண்டைவலி காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் திரைப்பட நடிகை விஜி காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டு இறந்தார். நடிகை அல்போன்சா காதல் தோல்வியால்தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X