காஜல் தங்கச்சிக்கு திருமணம்... தொழிலதிபரைக் கைப்பிடிக்கிறார்!
மும்பை: நடிகை காஜல் அகர்வாலின் தங்கையான நிஷா அகர்வாலுக்குத் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். மும்பையில் டிசம்பர் 28ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
நிஷா அகர்வாலும் நடிகைதான். சில தமிழ் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.
நிஷாவைத் திருமணம் செய்யப் போகிறவர் மும்பையில் தொழிலதிபராக இருக்கிறாராம்.

இஷ்டம் நாயகி
தமிழில் நிஷா ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளார். அதன் பெயர் இஷ்டம்.

தெலுங்கில் நிறைய
அதேசமயம், தெலுங்கில்தான் அவர் முதலில் அறிமுகமானார். அங்கு யெமன்டி இ வேல அவந்திகா, சோலோ, சுகுமாருடு, சரதக அம்மாயிதோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

டி.கே போஸ்
தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை நிஷா. தெலுங்கில் டிகே போஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மும்பையில் திருமணம்
மும்பையில் நிஷாவின் திருமணம் டிசம்பர் 28ம் தேதி நடைபெறவுள்ளது. அவரை மணக்கப் போகிறவர் தொழிலதிபர் ஆவார். அவரது பெயர் கரன் வெளச்சா.


Click it and Unblock the Notifications











