'புல்லட் ராணி'யாக மாறிய 'ஜே ஜே' நாயகி நிஷா கோத்தாரி
ஹைதராபாத்: பிரியங்கா கோத்தாரி என்ற நிஷா கோத்தாரி தற்போது தெலுங்கில் புல்லட் ராணி படத்தில் நடித்து வருகிறார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர் பிரியங்கா கோத்தாரி. பட்டம் பெற்ற பிறகு அவர் அதற்குரிய வேலையை தேடாமல் நடிக்க வந்துவிட்டார்.
அவரை நடிகையாகிவிட்ட பெருமை இயக்குனர் சரணை சேரும்.

ஜே ஜே
சரண் இயக்கிய ஜே ஜே படம் மூலம் நடிகையானவர் பிரியங்கா கோத்தாரி. ஆனால் படத்தில் அவரை அமோகா என்ற பெயரில் அறிமுகப்படுத்தினர்.

பாலிவுட்
பிரியங்கா பாலிவுட் சென்று அங்கு பல படங்களில் நிஷா கோத்தாரி என்ற பெயரில் நடித்துள்ளார். இருப்பினும் அவரால் பாலிவுட்டில் ஜொலிக்க முடியவில்லை.

தெலுங்கு
நிஷா தமிழ், இந்தி தவிர தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். வாய்ப்பு வருகையில் குத்தாட்டம் போடவும் அவர் மறுப்பது இல்லை.

புல்லட் ராணி
நிஷா தற்போது சுரேஷ் இயக்கத்தில் புல்லட் ராணி என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

போலீஸ் அதிகாரி
புல்லட் ராணி படத்தில் நிஷா துணிச்சலான போலீஸ் அதிகாரியாக ஆக்ஷனில் கலக்க உள்ளார். இந்த படமாவது அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











