வைரலாகும் நிதி அகர்வாலின் இளவரசி ஓவியம்!
சென்னை. தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கால் தடத்தை பதித்து உள்ள நிதி அகர்வால் ஈஸ்வரன் மற்றும் பூமி என நடித்த இரண்டு திரைப்படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகி ஹிட்டடித்தது.
இப்பொழுது பவன் கல்யாணுக்கு ஜோடியாக தெலுங்கில் ஹரி ஹர வீர மல்லு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் நிதி அகர்வாலின் அழகிய ஓவியம் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மூன்றாவது முறையாக கூட்டணி
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். ரோமியோ ஜூலியட் போகன் ஆகிய படங்களை தொடர்ந்து ஜெயம்ரவி இயக்குனர் லக்ஷ்மன் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளியான பூமி படத்திலும் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வாலுக்கு பூமி மற்றும் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகின.

புதிய திரில்லர் திரைப்படத்தில்
ஆரம்பமே அமர்க்களமாக நடித்த இரண்டு திரைப்படங்களும் ஒரே சமயத்தில் வெளியான நிதி அகர்வாலுக்கு இப்பொழுது தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர் திரைப்படத்தில் நிதி அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படபிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது.

ஹரி ஹர வீர மல்லு
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பவன் கல்யாண் நடிப்பில் சரித்திர படமாக உருவாகி வரும் ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இப்பொழுது இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் இந்நிலையில் விரைவில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசி போல
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் ஒப்பந்தமாகி வரும் நிதி அகர்வால் ஆரம்பம் முதலே கவர்ச்சியில் கொஞ்சமும் வஞ்சனையில்லாமல் காட்டி வருகிறார். குறிப்பாக இவர் சமூக வலைதளங்களில் பரவ விடும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. இந்த நிலையில்
நிதி அகர்வால் வெளியிட்டுள்ள தன்னுடைய பெயிண்டிங் புகைப்படத்தை பார்த்த பலரும் வர்ணித்து வருகின்றனர். வெள்ளைப் புடவையில் பார்ப்பதற்கு இளவரசி போல கொள்ளை அழகில் ஜொலிக்கும் நிதி அகர்வாலின் இந்த பெயிண்டிங் புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











