கோலிவுட்டில் புது டிரெண்ட் செட் பண்ணும் 3 நாயகிகள்
சென்னை: கோலிவுட்டில் நடிக்கும் நாயகிகளில் 3 பேர் புதிய டிரெண்டை செட் பண்ணி வருகிறார்கள்.
கோலிவுட்டில் நடிக்க அனைத்து மொழி நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோலிவுட் தான் பாலிவுட்டின் திறவுகோல் என்று இலியானா கூட தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகையாக வர பல நடிகைகள் தாராளாமாக கவர்ச்சி காட்டி நடிக்கின்றனர். இது பிற நடிகைகளை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படங்களில் நடிக்கும் 3 நடிகைகள் புதிய டிரெண்டை செட் பண்ணுகின்றனர்.

நித்யா மேனன்
நித்யா மேனனின் நடிப்பை இயக்குனர்களும், பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. அவர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராதவர். கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் தருவேன், கவர்ச்சியாக நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கறாராக தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மி மேனன்
கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை என்றால் அது லக்ஷ்மி மேனன் தான். தற்போதைக்கு நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ஹன்சிகாவுக்கே லக்ஷ்மி மேனனின் வளர்ச்சி சற்று பயத்தை அளித்துள்ளது என்று கூறப்படுகிறது. லக்ஷ்மி மேனனும் கவர்ச்சிக்கு தடா போட்டுள்ளார். கவர்ச்சி காட்டாமல் நடித்தாலும் அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அவருக்கு வரும் வாய்ப்புகளுக்கும் குறைவில்லை.

நஸ்ரியா நஸீம்
நேரம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி இருக்கும் நாயகி நஸ்ரியா நஸீம் முதல் படத்திலேயே நல்ல பெயர் எடுத்துவிட்டார். அவரும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











