அந்த இயக்குநரை கண்டதும் ஓடோடி சென்று நச்சுன்னு உம்மா கொடுத்த நித்யா மேனன்.. என்ன மேட்டர் தெரியுமா?

சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட படத்தின் நாயகி நித்யா மேனன் பிரபல இயக்குநரை பார்த்ததும் ஓடோடி சென்று அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்த காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

பொதுவாக நடிகைகளுக்கு ஹீரோக்களை தாண்டி இயக்குநர்கள் மீது அன்பும் மரியாதையும் எப்போதுமே இருக்கும். பல நடிகைகள் இயக்குநர்களையே காதலித்து திருமணமும் செய்துக் கொண்டனர். இப்படி இருக்க நித்யா மேனன் செய்த செயலும் பதிலுக்கு அந்த இயக்குநர் செய்த செயலும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

nithya menen mysskin kadhalikka neramillai

ஒவ்வொரு படத்துக்கும் வந்து தன்னால் முடிந்த அளவுக்கு பெரிய அளவில் படம் குறித்து பேசி புரமோட் செய்து வரும் அந்த இயக்குநருக்குத்தான் நடிகை நித்யா மேனன் கன்னத்தில் கிஸ் கொடுத்துள்ளார்.

இயக்குநர்களுடன் திருமணம்: நடிகை குஷ்பு இயக்குநர் சுந்தர். சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். நடிகை ரோஜாவும் இயக்குநர் செல்வமணியைத்தான் காதலித்து திருமணம் செய்தார். நடிகை நயன்தாரா சிம்பு இயக்கத்தில் நடிக்கும் போது அவரை காதலித்தார். அதன் பின்னர் பிரபுதேவா இயக்கத்தில் விஜய்யுடன் வில்லு படத்தில் நடிக்கும் போது அவரை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில், திருமணம் நடைபெறாமல் நின்றது. கடைசியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது விக்னேஷ் சிவனை பல வருடங்கள் காதலித்த பிறகு திருமணம் செய்துக் கொண்டனர்.

nithya menen mysskin kadhalikka neramillai

காலில் விழுந்துவிடுவார் ஐஸ்வர்யா ராய்: உலக அழகி ஐஸ்வர்யா ராய் எப்போது மணிரத்னத்தை பார்த்தாலும் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிடும் பழக்கத்தை கொண்டுள்ளார். இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் போது கூட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது இயக்குநர் மணிரத்னம் காலை தொட்டு ஆசி வாங்கிய காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.

nithya menen mysskin kadhalikka neramillai

மிஷ்கினுக்கு முத்தம்: ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நித்யா மேனன் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற போது அங்கே சிறப்பு விருந்தினராக வந்த இயக்குநர் மிஷ்கினை பார்த்ததும் நீங்க இங்க வருவதாக எனக்கு யாருமே சொல்லவில்லை. என்று அவரை பார்த்ததுமே ஓடோடி சென்று அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பதிலுக்கு நடிகை நித்யா மேனனின் கையை பிடித்து மிஷ்கினும் முத்தம் கொடுத்து அவருக்கு தலையில் கை வைத்து ஆசியும் வழங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

nithya menen mysskin kadhalikka neramillai

என்ன தொடர்பு: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி உள்ள காதலிக்க நேரமில்லை படத்திலும் இவர் தான் ஹீரோயின். இயக்குநர் மிஷ்கினுடன் உள்ள நல்ல நட்புக் காரணமாகத்தான் பொதுவெளியில் ரொம்ப நாள் கழித்து அவரை பார்த்ததும் அவருக்கு முத்தம் கொடுத்திருக்கிறார் நித்யா மேனன் என்கின்றனர். தொடர்ந்து பல படங்களின் புரமோஷன்களுக்கு சென்று அந்த படங்களை சிலாகித்துப் பேசி ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார் மிஷ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.

nithya menen mysskin kadhalikka neramillai

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X