’பாடி ஷேமிங்’ ஒரு மோசமான செயல்.. வெப்சீரிஸில் அடியெடுத்து வைத்துள்ள நித்யா மேனன் விளாசல்!

சென்னை: தனது தோற்றத்தை வைத்து பலரும் 'பாடி ஷேமிங்' செய்வது ஒரு மோசமான செயல் என விளாசி உள்ளார் நடிகை நித்யா மேனன்.

Recommended Video

Nithya Menon Rips Body Shaming • Breathe | Amitabh Bhachchan

மாதவன் நடித்திருந்த 'ப்ரீத்' வெப்சீரிஸின் அடுத்த பாகம் Breathe: Into the Shadows என்ற பெயரில் அமேசான் பிரைமில் விரைவில் வெளியாக இருக்கிறது.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை நித்யா மேனன் இந்த வெப்சீரிஸின் மூலம் வெப்சீரிஸ் உலகிற்கு அறிமுகமாக உள்ளனர்.

சிறப்பான நடிப்பு

சிறப்பான நடிப்பு

சித்தார்த்தின் 180 படத்தின் முலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நித்யா மேனன், 7 ஓ கிளாக் எனும் கன்னட படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமனார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தனது சிறப்பான நடிப்பால் கலக்கி வருகிறார் நித்யா மேனன்.

விஜய்யுடன்

விஜய்யுடன்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்த நித்யா மேனன், பாலிவுட் வரை பரபரப்பாக பேசப்பட்டார். அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி, நித்யா மேனனுக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன் மிஷன் மங்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 10

ஜூலை 10

வரும் ஜூலை 10ம் தேதி நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ப்ரீத் சீசன் 2 வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்த வெப்சீரிஸில் நித்யா மேனன் உடன் இணைந்து அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார். மகளை காணாமல் தேடி தவிக்கும் தாயாக நித்யா மேனன் நடித்துள்ளார். (ஒரே மாதிரியான கதையாக வருகிறதே).

குண்டா இருக்க

குண்டா இருக்க

குண்டான நடிகைகளுக்கு வரும் பாடி ஷேமிங் பிரச்சனையை சமீப காலமாக நடிகை நித்யா மேனனும் சந்தித்து வருகிறார். வெப்சீரிஸ் விளம்பரத்திற்காக வெப் போர்ட்டல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நடிகைகளின் உடல் வாகு அவர்களது லைஃப் ஸ்டைலில் மட்டுமின்றி, மற்றும் பல காரணங்களுக்காக மாறும் என்று கூறியுள்ளார்.

அதை மட்டும் பாருங்க

அதை மட்டும் பாருங்க

ஆபாசமாக கவர்ச்சி காட்டி நடிக்காமல், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து, நல்ல நடிகை என பாராட்டுக்களை குவித்து வரும் நித்யா மேனன், நடிகர்களின் திறமையை மட்டும் பாருங்க, அதில் குறை இருந்தால் விமர்சனம் செய்யுங்கள், ஆனால், உடலின் தோற்றம், சொந்த வாழ்க்கை குறித்தெல்லாம் பேச யாருக்கும் உரிமை இல்லை என தன்னை ‘பாடி ஷேமிங்' செய்தவர்களை விளாசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X